உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலம்புழாவில் பெருங்கற்கால சின்னங்கள்: ஆய்வாளர்கள் ஆச்சர்யம்

மலம்புழாவில் பெருங்கற்கால சின்னங்கள்: ஆய்வாளர்கள் ஆச்சர்யம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு: மலம்புழா அணை அருகே, அதிக எண்ணிக்கையிலான பெருங்கற்கால சின்னங்கள் கண்டறியப்பட்டது, தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது மலம்புழா அணை. இந்த அணை அருகே தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வுகளில் பெருங்கற்கால சின்னங்கள் கண்டறியப்பட்டன. இந்த சின்னங்கள், அணைக்கு அருகே தீவு போன்ற மேட்டுப்பகுதியில் அமைந்துள்ளன. மொத்தம் 45 ஹெக்டர் பரப்பில் 110 பெருங்கற்கால சின்னங்களை தொல்லியல் துறை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.இவை அனைத்தும் பெரும்பாலும் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களாக உள்ளன. கல் வட்டம், தாழிகள், கல் திட்டைகள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இவை, மிகப்பெரிய கற்பலகைகளை கொண்டும், கற்களை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பெருங்கற்கால சின்னங்கள், ஒரே இடத்தில் கண்டறியப்பட்டது, ஆய்வாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கேரளாவில், முன் இரும்புக்காலத்தில் வாழ்ந்த மக்கள், அவர்களது நம்பிக்கைகள் பற்றிய தகவல்களை புரிந்து கொள்ள முடியும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rajkumar
மார் 23, 2025 14:23

சரியாக சொன்னீர்கள்...


ராமகிருஷ்ணன்
மார் 23, 2025 14:16

அங்கே இருந்தவர்கள் திராவிடர்கள் என்று நம்ம துண்டுசீட்டு அறிக்கை விடக் கூடும், அல்லது கட்டுமரத்தின் மூதாதையர் என்று கூட சொல்வாங்க


Kasimani Baskaran
மார் 23, 2025 14:10

ஏன் மலம்புழாவில் பண்டைய கால நாகரீகத்தின் எச்சம் இருக்கக்கூடாதா? தமிழகத்தில் பூம்புகார் கூட பழமையானது. கடலுக்கடியில் மூழ்கிய நாகரீகம் இருக்கத்தான் செய்கிறது. அதில் யாருக்கும் ஆர்வமில்லை. யுகங்களை கடந்த நாகரீகம்தான் தமிழனின் நாகரீகம்.


vijay
மார் 23, 2025 13:54

முதல் தமிழன் என்றால் என்ன? முதல் தமிழன் என்பவன் உக்கிரமாக அடுத்தவன் சொல்வதை கேட்டு, எழுதியதை படித்து, எதையுமே ஆராயாமல், பகுத்தறியாமல் கம்பு சுத்தறவன் என்று பொருள்.


ஆரூர் ரங்
மார் 23, 2025 12:43

கீழடி மாதிரி இதனை வைத்தும் அரசியல் செய்யலாமே. புல் தோன்றி புண்ணாக்கு செய்வதற்கு முன்பே முன் தோன்றிய சே(ட்டன்)ர நாடு ன்னு பாடப்புத்தகத்தில் போடலாம்.


முதல் தமிழன்
மார் 23, 2025 12:59

சரியாகத்தான் சொன்னீர்கள். ஆரியன் வந்து கெடுத்து குட்டி சுவர் ஆக்குனதும் அதில் தெரியும்.


சமீபத்திய செய்தி