மனைவியை கொலை செய்தவருக்கு வலை
முசாபர் நகர்: மது குடிப்பதை கண்டித்த மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீசார் தேடுகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் சிம்பல்கா கிராமத்தை சேர்ந்தவர் பூரண் சிங்,50. தினமும் மது குடிக்கு பழக்கம் கொண்டவர். அதை அவர் மனைவி கண்டித்தார். நேற்று முன் தினம் மாலை, பூரண் சிங் வழக்கம் போல மது குடித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி அதைக் கண்டித்து வாக்குவாதம் செய்தார். ஆத்திரம் அடைந்த பூரண் சிங், கத்தியால் மனைவியை சராமாரியாக குத்தினார். மனைவி ரத்த வெள்ளத்தில் சரிந்தவுடன் தப்பி ஓடினார். பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, பூரண் சிங்கை தேடி வருகின்றனர்.