டில்லிக்கு புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்
விக்ரம்நகர்:மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர் ஆலிஸ் வாஸை மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக ஆகஸ்ட் 2023ல் பி.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார். அவர் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார். இதற்கு கடந்த மாதம் அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.கிருஷ்ணமூர்த்திக்குப் பதிலாக ஏ.ஜி.எம்.யு.டி., கேடரின் 2005 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஆர் ஆலிஸ் வாஸ் நியமிக்கப்படுகிறார். அவர் தற்போது, டில்லியின் உயர்கல்வி இயக்குனரகத்தில் செயலராகப் பணியாற்றி வருகிறார்.டில்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாற்றத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.