உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய சட்டங்கள் மாற்றும்!

புதிய சட்டங்கள் மாற்றும்!

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், அனைவருக்கும் நீதியை எளிதாகவும் சரியான நேரத்திலும் அணுகக்கூடிய வகையில் மாற்றும். பழைய சட்டங்களின் கீழ், வழக்குகள் 30 ஆண்டுகள் வரை தண்டனை வழங்காமல் இழுத்தடிக்கப்படும். இனி, புதிய சட்டங்கள் அதை மாற்றும். அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

வானத்தில் கட்ட முடியாது!

மாநில தலைநகரை, வானத்தில் கட்டமைக்க முடியாது. எந்த கட்டுமானமாக இருந்தாலும், அதற்கு நிலம் அவசியம். அமராவதி திட்டத்திற்கு நிலத்தை வழங்கிய விவசாயிகளின் தியாகத்தை நான் என்றும் மறக்க மாட்டேன். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்

அஞ்ச மாட்டேன்!

வாழ்நாள் முழுதும் பா.ஜ.,வுக்கு எதிரான என் போராட்டம் தொடரும். நான் ஒரு உண்மையான பீஹாரி, வெளியாட்களை கண்டு அஞ்ச மாட்டேன். போராட்டங்கள் நிறைந்த பாதையை நாங்கள் தேர்ந்தெடுத்து உள்ளோம். இப்பாதையில் நடப்பதன் மூலம், நாங்கள் எங்கள் இலக்கை நிச்சயம் அடைவோம். தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை