உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  நிரவ் மோடியின் சட்ட முயற்சிகள் தோல்வி: விரைவில் நாடு கடத்தப்படுகிறார்

 நிரவ் மோடியின் சட்ட முயற்சிகள் தோல்வி: விரைவில் நாடு கடத்தப்படுகிறார்

புதுடில்லி: பிரிட்டனில் உள்ள ஐரோப்பிய மனித உரிமை கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கடைசி மேல்முறை யீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f59nopu9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதை திருப்பிச் செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி சென்றார். 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் உதவியுடன், 2019ல் பிரிட் டன் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தீவிரமாக உள்ளது. கடந்த 2021ல், அப்போதைய பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி படேல், நிரவ் மோடியை நாடு கடத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து பிரிட்டன் நீதிமன்றங்களில் பலமுறை மேல்முறையீடு மனுக்களையும், ஜாமின் மனுக்களையும் அவர் தாக்கல் செய்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. கடைசி முயற்சியாக, 'இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் சித்ரவதை செய்யப்படுவேன்' எனக் கூறி, கடந்த ஏப்ரலில், லண்டனில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் நிரவ் மோடி முறையிட்டார். இந்த மனுவும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து முயற்சிளும் தோல்வி அடைந்த நிலையில், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான பணிகளை பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ளது-. இதனால், எந்த நேரத்திலும் அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.RAMACHANDRAN
ஜூலை 07, 2026 07:08

லஞ்சத்தின் அடிப்படையில் ஆயிரக் கணக்கான கோடிகள் ஒரு நபருக்கு கடன் கொடுத்துவிட்டு அதனை வசூலிக்காமல் தப்பிக்கச் செல்ல விட்டுவிட்டு நம் நாட்டிற்கு கொண்டுவர ஆயிரக் கணக்கான கோடிகள் செலவு செய்கின்றனர் இந்நாட்டில்.


Raj
ஜூலை 07, 2026 06:51

ஒன்றும் நடக்காது, ஏமாற்று வேலை. அப்படி கொண்டுவரவேண்டுமென்றால் 2021 லே நடந்திருக்கும்.