உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூலை 30ல் விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைகோள்: இஸ்ரோ அறிவிப்பு

ஜூலை 30ல் விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைகோள்: இஸ்ரோ அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் ஜூலை 30ம் தேதி அன்று மாலை இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து தயார் செய்துள்ள நிசார் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ளது.இது குறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளதாவது:வரும் ஜூலை 30ல் மாலை 5.40 மணிக்கு நிசார் எனப்படும் வரலாற்று சிறப்புமிக்க செயற்கை கோள், நாசாவுடன் இணைந்து ஏவப்பட உள்ளது. இது இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 மூலம் நாசாவுடன் இணைந்து முதல் முறையாக இயக்கப்படுகிறது. இந்த செயற்கைகோள் பூமியை பற்றிய கண்காணிப்புக்கு பெரிதும் பயன்படும்.'நிசார்' ஒவ்வொரு 12 நாட்களுக்கும் முழு உலகத்தையும் ஸ்கேன் செய்து, உயர் தெளிவுத்திறன், அனைத்து வானிலை, பகல் மற்றும் இரவு தரவை வழங்கும்.இதன் மூலம் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.கடல் பனி கண்காணிப்பு, கப்பல் கண்டறிதல், புயல் கண்காணிப்பு, மண் ஈரப்பத மாற்றங்கள், மேற்பரப்பு நீர் மேப்பிங் மற்றும் பேரிடர் மீட்பு உள்ளிட்ட பல முக்கியமான பயன்பாடுகள் குறித்து பணிகள் மேற்கொள்ளும். இது இஸ்ரோ-நாசா இடையே 10 ஆண்டுக்கும் மேலான ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லாக அமையும்.இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

subramanian
ஜூலை 21, 2025 21:38

வாழ்த்துக்கள். இந்திய கடல் எல்லைகள், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லையில் கவனம் செலுத்த வேண்டும்.