உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்தார் நிதிஷ்

பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்தார் நிதிஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்.பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந் நிலையில், முதல்வர் பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக 2 நாள் பயணமாக நேற்று நிதிஷ்குமார் டில்லி சென்றார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இன்று சந்தித்து பேசினார். சந்திப்பின் போது துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் (எ) லாலன் சிங் உடனிருந்தனர். சந்திப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் லாலன்சிங். பீஹார் துணை முதல்வர் சாம்ராட் ஆகியோருடன் ஒரு சந்திப்பு நடந்தது. பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் ஆகியோரின் தலைமையில், மாநிலத்தின் நலனையும் நல்லாட்சியையும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு அந்த பதிவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
டிச 22, 2025 18:30

தாடியை புடிச்சு இழுத்துப் பாக்காம இருந்தா சரி


vivek
டிச 22, 2025 21:00

பெத்தவங்களை கூட கிண்டல் பண்ணும் பிறவி


SUBBU,MADURAI
டிச 22, 2025 21:29

ஏலே அப்புசாமி உன் கேலியும் கிண்டலும் அளவுக்கு மீறி போய் கொண்டிருக்கிறது ஜாக்கிரதை!


புதிய வீடியோ