போட்டி இல்லை!
நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற வகையில், முன்னாள் பிரதமர் நேருவை மோடி முந்தியது ஒரு வரலாற்று பதிவு மட்டுமே; இதில் எந்த போட்டியும் இல்லை. புதிய இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் பங்கு அசைக்க முடியாதது. இது, அனைவருக்கும் தெரியும். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,
ஏற்க முடியாது!
முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, அமலாக்கத் துறை முன்பு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு உயர் நீதிமன்றமே காரணம். இந்த விவகாரத்தில், மாநில அரசை குறை கூற முடியாது. வழக்கின் போக்கையும் மாநில அரசு தீர்மானிக்க முடியாது. சட்டம் - ஒழுங்கை சீர் குலைப்பதை ஏற்க முடியாது. வி.டி.சதீசன் கேரள முதல்வர், காங்கிரஸ்காங்கிரசே காரணம்!
ஆந்திராவில் சிறப்பு அந்தஸ்து கோரி நடந்து வரும் போராட்டத்திற்கு, காங் கிரசின் முறையற்ற மற்றும் பிளவு படுத்தும் அணுகுமுறையே காரணம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியி ன் போது இதற்காக கொண்டு வரப்பட்ட மறுசீரமைப்பு சட்டத் தால், கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆந்திரா தள்ளப்பட்டது. பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்வர் ஜனசேனா கட்சி