உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமருக்கு விதிவிலக்கல்ல: பதவி பறிப்பு மசோதாவில் மோடியின் நிலைப்பாட்டை விவரித்தார் கிரண் ரிஜிஜூ!

பிரதமருக்கு விதிவிலக்கல்ல: பதவி பறிப்பு மசோதாவில் மோடியின் நிலைப்பாட்டை விவரித்தார் கிரண் ரிஜிஜூ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''30 நாட்களுக்கு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதாவில் பிரதமருக்கு எந்த சலுகையும் வழங்க மோடி நிராகரித்துவிட்டார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y1dku9nx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி: ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர். நான் அவரை விமர்சிக்க விரும்பவில்லை. பிரதமரை விமர்சித்த போதும், ரபேல் குறித்து முட்டாள்தனமாகப் பேசியபோதும், சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறியபோதும் சுப்ரீம்கோர்ட் அவரை திட்டியது. ஒரு ஜனநாயகத்தில், எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும்.

ஆபத்தான பாதை

எதிர்க்கட்சியின் அடிப்படைக் கடமைகளை அவர்களால் செய்ய முடியவில்லை. ராகுல் மிகவும் ஆபத்தான பாதையில் செல்கிறார். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல இடதுசாரி அமைப்புகள், காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக சதி செய்து வருகின்றன. ராகுலும், காங்கிரசும் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாட்டை பலவீனப்படுத்தி வருகின்றனர். இது மிகவும் கவலையளிக்கிறது.

சீர்குலைக்க முடியாது

பிரதமர் மோடியின் தலைமையில் செயல்படும் நாட்டை யாரும் சீர்குலைக்க முடியாது. நீதித்துறை மற்றும் தேர்தல் கமிஷனை அவர்கள் பலவீனப்படுத்தும் வகையில் அவர்கள் பேசுகின்றனர். அரசாங்கத்தின் நம்பகத் தன்மையையும் பலவீனப்படுத்த சதி செய்யும் போது, ​​அது கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்கள் இடதுசாரி மனநிலையுடன் செயல்படுகிறார்கள். எதிர்க்கட்சி கேள்விகள் கேட்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டியவர்கள் ஓடிவிட்டால் அரசாங்கம் என்ன செய்யும்? நாங்கள் அவர்களிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டு வருகிறோம்.

சிறப்பு சலுகைகள்

30 நாட்களுக்கு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதாவில் பிரதமருக்கு எந்த சலுகையும் வழங்க மோடி நிராகரித்துவிட்டார். பிரதமரும் ஒரு குடிமகன் தான் அவருக்கு எந்த சிறப்பு பாதுகாப்பு இருக்க கூடாது. இந்த மசோதாவில் பிரதமரை விலக்கி வைக்க அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பிரதமர் மோடி ஏற்க மறுத்தார். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

MUTHU
ஆக 24, 2025 19:51

நீதிபதிகளையும் சேருங்கள்.


M Ramachandran
ஆக 24, 2025 17:58

அவர்களின் முக்கிய அஜென்ட்டா அதாவது வாழ்நாள் மக்கள் அரசு கஜானா முழுவதும் அவர்கள் வசமிருந்தால் அரசியலுக்கு வந்த நோக்கம் நிறை வேறும். அந்த ஆசையில் சூசிரியனிடமிருந்து டெம்ப்பரி யாக பிரிந்து கொல்லையய அடிக்கும் கும்பலுக்கு ஆர்ப்பாட்டமாக சினிமா வசனம் பேசி கையையும் காலையும் தூக்கி காட்டி அட்டையை கத்தியுடன் குதிரையயேரி வில்லன் வேசத்தில் வரும் சக நடிகரின் உதவியுடன் தன்னால் முடிந்த அளவுக்கு மக்களை தன் பங்க்கிற்கு முட்டாளாக்கி மக்கள் கஜானாவை பிடிக்க முயற்சியை எடுத்துள்ளார். ஏற்கனவே பெரியார் பீனிசம் உப்பீசம்னு சொல்லிமாக்கலிய்ய ஏமற்றி சுக வாழ்வில் திளைத்திருக்கும் கும்பலிய்ய பார்த்து அவவனுக்கு ஆசை வாழ்நாள் செட்டல் மென்ட்டுக்கு ஆசை. மக்களுக்கு அந்த ஆசை வரமால் மிக ஜாக்கிரதையாக எங்கும்இல்லா திராவிடம் பேசி மக்கலிய்ய மொட்டையடித்து காது குத்தி அவர்கள் சுக போக வாழ்க்கையில் குடும்பத்துடன் ஆண்டு கொண்டு மகிழ்ச்சியை வெள்ளத்தில் மிதந்து ஆந்த நடனம் கூத்து ஆடி இருக்கின்றனர்.


M Ramachandran
ஆக 24, 2025 17:16

நீங்க வேற. மந்திரி பதவியே சாஸ்வதமில்லை பிரதமர் பதவிக்கு போயிட்டேங்க. வர வர பொழைய்யப்பயிக்கெடுத்துகொண்டேயா வாந்தால் எப்படி வம்ச வளர்ச்சி என்னாவது


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஆக 24, 2025 15:28

அருமையான சட்டம். உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் . அரசியல் சுத்தமடையட்டும். அப்போதுதான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்


J.Isaac
ஆக 24, 2025 13:50

பிரதமர் பதவி யாருக்கும் நிரந்தம் அல்ல.


vivek
ஆக 24, 2025 15:45

முதல்வர் பதவியும் நிரந்தரம் அல்ல இசாக்கு


venugopal s
ஆக 24, 2025 12:56

அதெல்லாம் சரி தான், ஆனால் பிரதமரை கைது செய்ய இந்தியாவில் சி பி ஐ தொடங்கி எந்த அமைப்பிற்கு தைரியம் உள்ளது? அல்லது கைது செய்யத் தான் விட்டு விடுவார்களா? அவ்வளவு தைரியமும் நேர்மையும் இருந்தால் பிரதமரை கைது செய்ய மாநில காவல்துறைக்கு அதிகாரம் கொடுத்து பார்க்க வேண்டியது தானே?


vivek
ஆக 24, 2025 15:44

வீணா ....மாநில முதல்வரை மாநில காவல் துறை கைது செய்ய முடியும்


T.sthivinayagam
ஆக 24, 2025 11:55

மிக பெரிய சாம்ராஜ்யங்கள் நீதி தவறும் போது அழிவையே சந்தியுள்ளன.


vivek
ஆக 24, 2025 12:51

நாயகம்...உன்னை வாய் திறக்க வேண்டாம் என்று தமிழ் மக்கள் கேட்டுகொள்கின்றனர்


senthilanandsankaran
ஆக 24, 2025 10:29

எதை வேண்டுமானானும் பேசி பதவிக்கு வந்து ஊழல் செய்து சம்பாதித்து .நீதியை விலை கொடுத்து வாங்கலாம் என்ற நிலையை உருவாக்கி விட்ட திமுக பாரம்பரியம்..இப்பொழுது பரம்பரை ஆட்சி அரசியலை பகிரங்கமாக அமல்படுத்துகிறது...இதற்கு ஒரு சட்டம்.. யாரும் பத்து வருடத்திற்கு மேல் அதிகாரம் செய்ய முடியாது என்ற நிலை வர வேண்டும்.


Hari
ஆக 24, 2025 09:59

கோபாலபுரத்தில் அந்த கேள்வியை கேட்கனும் ஓட்டுப்போட்டது திமுக விற்கு ஆனால் பணம் எதிர்பார்ப்பது மோடிகிட்ட, நல்லா கோபாலபுரம் வேளச்சேரி நோக்கி முட்டிபோடனும். நகைக்கடன் நீட்டு 75 ரூபாய்க்கு பெட்ரோல் 60 ரூபாய்க்கு டீசல் 500ரூபாய்க்கு காஸ் இதையெல்லாம் சுடாலின்கிடட கேட்கணும் அதுக்கு ஒரு நியாயம் உண்டு .


ராஜா
ஆக 24, 2025 09:29

எல்லோரும் 21000 முதலீடு செய்தால் போதுமானது வாழ்க்கை செழிக்கும் என்ற விளம்பரம் ஒன்று ஊர்வலமாக வந்து விட்டது, அதாவது பாக்கி 15 லட்சம் ரூபாய்க்கு சுமார் 75 பங்குகள் எப்படி கிடைக்கும் காத்து இருந்து வாங்க முடியுமா


முக்கிய வீடியோ