உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நோ ஹெல்மெட் நோ பெட்ரோல் : வாகன ஓட்டிகளுக்கு கிடுக்கி

நோ ஹெல்மெட் நோ பெட்ரோல் : வாகன ஓட்டிகளுக்கு கிடுக்கி

லக்னோ: உத்தர பிரதேசத்தில், சாலை விபத்துகளை குறைக்கும் முயற்சியாக, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது என, அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 75 மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில போக்குவரத்து கமிஷனர் பிரஜேஷ் நரேன் சிங் சமீபத்தில் எழுதிய கடிதம்:இந்த மாத துவக்கத்தில், சாலை பாதுகாப்பு குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, மாநிலத்தில் சாலை விபத்துகளால், ஆண்டுதோறும் 25,000 - 26,000 பேர் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டார். பெரும்பாலான சாலை விபத்துகளில், இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாததே உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், உ.பி.,யில் சாலை விபத்துகளை குறைக்க, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எரிபொருள் விற்பனை செய்யக் கூடாது. அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். ஹெல்மெட் அணியால் வாகன ஓட்டி அடிக்கடி வந்தால், அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இந்த முயற்சி, வாகன ஓட்டிகளிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்துவதையும், பாதுகாப்பான சாலை கலாசாரத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.கடந்த 2019ல் இந்த முயற்சி, கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, இந்த புதிய உத்தரவை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதில் அலட்சியம் கூடாது. இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'ஹெல்மெட் இல்லை என்றால், எரிபொருள் இல்லை' என்ற வாசகத்துடன், பெரிய அளவில், பெட்ரோல் பங்க்குகளில் பேனர் வைக்கப்பட வேண்டும். மேலும், சமூக ஊடகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்தி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ray
ஜன 13, 2025 06:44

நோ போலீஸ் சோ நோ ஹெல்மெட் நோ பெட்ரோல்


Oru Indiyan
ஜன 13, 2025 00:51

நேரிடையாக சொன்னால் புரியாது.. இப்படி மிரட்டினால் தான்... தலைக்கவசம் அணிவார்கள். ஆனால்,நம்ம ஊர் குறுக்கு புத்தி வியாபாரிகள் பெட்ரோல் பங்க் அருகில் ஹெல்மெட் வாடகைக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பார்கள்.


பிரேம்ஜி
ஜன 13, 2025 07:35

சரியாகச் சொன்னீர்கள்! இந்தியனா, கொக்கா? முறைகேடு, ஊழல், ஒழுங்கீனம் இல்லாதவர்கள் இந்தியர்கள் என்று சொல்லமுடியாது!


visu
ஜன 13, 2025 09:11

நல்ல திட்டம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை