உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; இதுவரை எந்த கட்சியும் ஆட்சேபிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; இதுவரை எந்த கட்சியும் ஆட்சேபிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் இதுவரையில் எந்த அரசியல் கட்சிகளும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் சுமார் 65 லட்சம் சட்டவிரோத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் விபரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் விரும்பாத நிலையில், உச்சநீதிமன்றம் பட்டியலை வெளியிட ஆணை பிறப்பித்துள்ளது. இதனிடையே, கடந்த ஆக.,1ம் தேதி முதல் பீஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் முறையாக தெரிவித்துள்ள ஆட்சேபனைகள் மற்றும் உரிமை கோரல்கள் குறித்த விபரங்களை தேர்ல் ஆணையம் தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஆக.,1ம் தேதி முதல் இன்றைய (ஆக.,15) தினம் வரையில் 28,370 உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் நேரடியாக வாக்காளர்களால் தாக்கல் செய்யப்பட்டன. கூடுதலாக, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட புதிய வாக்காளர்களால் ஒரு லட்சத்து 03 ஆயிரத்து 703 படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.ஆனால், பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எந்த கட்சிகளிடம் இருந்தும் எந்தவித உரிமை கோரல்களோ, ஆட்சேபனைகளோ வரவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

raju
ஆக 19, 2025 09:47

தவறு என்று ஒத்துக்கொள்ளவில்லை. திருடி விட்டேன். யாரும் திருட்டு என்று சொல்லவில்லை. அதனால் இது திருட்டு இல்லை. ஒரு அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பு இந்த மாதிரி செய்வது பிரிட்டிஷ் காரணை விட மோசமான தேச துரோகம் ஆகும்


indian
ஆக 16, 2025 08:54

எதுக்குடா பச்சையா பொய் சொல்றீங்க, வெக்கம் இல்லாமல் ?


என்றும் இந்தியன்
ஆக 15, 2025 18:23

பங்களாதேசிகள் எண்ணிக்கை 5.2 கோடி இன்று இந்தியாவில். அவர்கள் இந்தியர்களா????வேடிக்கை .அரசியல்வியாதிகள் இவர்களுக்கு ஆதார் கார்டு கொடுக்க எல்லா உதவியும் செய்திருக்கின்றார்கள். ஆகவே அவர்களுக்கு இவர்கள் ஒட்டு வங்கியாகிவிட்டார்கள்


D.Ambujavalli
ஆக 15, 2025 16:44

அதாவது, கோர்ட் கொடுத்த கெடுவில் பட்டியல் விவரங்களைக் கொடுக்க முடியாது என்று நாசூக்காக சொல்கிறது தேர்தல் ஆணையம் மடியில் எவ்வளவு கனம் இருக்கிறதோ, நாளை ஒவ்வொரு மாநில நிலவரமும் கேட்டு, இப்படிக்கு கொடுக்கும் நிலை வந்துவிடுமோ என்ற பதற்றத்தின் வெளிப்பாடுதான் இது


Karthik Madeshwaran
ஆக 15, 2025 15:53

விவேக் வாய தொறந்தாலே பொய்யி தான். 300 MP டெல்லியில் ஊர்வலம் ஆட்சேபனை தெரிவிக்காமல் தான் போனார்களா ?? People lost hope on Election Commission. Worst.


K.n. Dhasarathan
ஆக 15, 2025 15:40

எந்த கட்சியும் ஆட்சேபிக்கவில்லையா ? தேர்தல் ஆணையம் என்ன தூங்குகிறதா ? நாடே கொந்தளித்துக்கொண்டு இருக்கிறது, இவர்கள் சட்டம் பேசுகிறார்கள், தேர்தல் ஆணையமா அல்லது தில்லு முள்ளு ஆணையமா ?


தமிழ்வேள்
ஆக 15, 2025 15:21

கண்மூடித்தனமாக எல்லோருக்கும் ஓட்டுரிமை என்ற பைத்தியக்காரத்தனம் பாரதத்தில் மட்டுமே உள்ளது... குறைந்தது தொழில் வரி செலுத்தாததவன், குறைந்த அளவு ஸ்கூல் ஃபைனல் முடிக்காதவன் ஆகியோருக்கு ஓட்டுரிமை எதற்கு? வாக்கின் மதிப்பு தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு எதற்கு ஓட்டுரிமை? எல்லாவற்றுக்கும் ஒரு தகுதி தேவை என்றால் அது ஓட்டுரிமைக்கு செல்லுபடி ஆகாதா? குறைந்த பட்சம் ஓட்டப்போடும் வயது 24 ஆக இருக்க வேண்டும்... வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட வேண்டும்.... ஆரோக்கியமான சமூகத்துக்கு ஜனநாயகத்துக்கு மெச்சூர்ட் வாக்காளர்கள் மட்டுமே தேவை.. வந்தவன் போனவனுக்கெல்லாம் ஓட்டுரிமை எதற்கு?


பெரிய குத்தூசி
ஆக 15, 2025 13:32

கடந்த லோக்சபா தேர்தலின் போது முறை கோவை மற்றும் பல தமிழக பகுதிகளில் வேண்டுமென்றே தமிழக வாக்கு பதிவு அதிகாரிகளாக பணியாற்றும் திமுக ஆதரவு ஜாக்டோஜியோ அமைப்பின் உறுப்பினர்களான தமிழக அதிகாரிகள் திமுக அல்லாமல் மற்ற கட்சிக்கு வோட்டு போடும் வாக்காளர்களின் வாக்கு தரவுகளை பூத் வாரியாக நீக்கி வாக்களிக்காமல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல் திமுக ஆதரவு தமிழக அதிகாரிகள் களத்தில் நிறைய டூப்ளிகேட் வாக்காளர்களை உருவாக்கி திமுகவுக்கு சாதகமாக ஓட்டுக்களை பெற இந்த முறை திமுக ஒருவரின் பெயரிலேயே இரண்டு அல்லது பல வாக்காளர்களை உருவாக்கி தேர்தல் சமயத்தில் கள்ள வாக்குகளை தேர்தல் அலுவலராக பணியாற்றும் திமுக ஆதரவு அரசு அதிகரிகளையே வைத்து டூப்ளிகேட் வாக்காளர்களின் வாக்கை கடகட வென பூத்து க்கு 100 - அல்லது 200 முறை பட்டனை அழுத்தினால் திமுக 2026 ல் 201 தொகுதியில் கண்ணை மூடிக்கொண்டு ஜெயிக்கும்.


Tamilan
ஆக 15, 2025 12:50

யாரும் ஆட்சேபிக்கவில்லையெனில் தேர்தல் ஆணையம் தினமும் எதிரிகட்சித்தலைவர் ராகுலை வசைபாடியதெல்லாம் சர்வாதிகார பாஜவின் அரசியலா?


vivek
ஆக 15, 2025 13:28

ராகுல் பொய் சொன்னார்...வாங்கி கட்டிக்கிட்டார் தமிழன் ...


Rathna
ஆக 15, 2025 12:32

இறந்து போனவர்கள், வீட்டை மாற்றி வெளி மாநிலம், வெளி ஊர் சென்றவர்கள், பங்களாதேஷி, பர்மா, நேபாளத்தை சேர்ந்த வெளிநாட்டு காரன் பேரை நீக்குவதை ஏன் குறை சொல்ல வேண்டும். ஒருத்தன் கையில் 3-5 வோட்டர் கார்டு இருக்கிறது. திருவிழாவுக்கு வருவது போல் பணத்தை வாங்கி கொண்டு, பல வோட்டு சாவடிகளில் கள்ள வோட்டு போடுவதை ஏன் கனவான்கள் அனுமதிக்க வேண்டும்? ஆதார் கார்டை வோட்டர் id உடன் இணைத்தல் பாதி பிரச்னையை குறைக்க வழி வகுக்கும்


Sridhar
ஆக 15, 2025 15:40

ஆதார் அட்டையையும் ஊடுருவல் காரர்கள் வைத்திருக்கலாமே. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறான வழிகளில் பல ஆவணங்கள் தயார் செய்து கொடுக்கும் ஆட்கள் இருக்கலாம். அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க ஒத்துழைக்க லாமே


Rathna
ஆக 16, 2025 12:31

ஆதாருடன், இந்தியாவில் 10 வகுப்பு படித்த சான்றிதழ், அப்பாவின் படிப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட வேண்டும். பிடிக்காதவர்களுக்கு, 1970 முன்னால் உள்ள வீடு உரிமை அல்லது நில உரிமை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்


முக்கிய வீடியோ