உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாடுகளின் அழுத்தம் இல்லை: யுபிஐ கட்டண விவகாரத்தில் மத்திய அரசு மறுப்பு

வெளிநாடுகளின் அழுத்தம் இல்லை: யுபிஐ கட்டண விவகாரத்தில் மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி: யு.பி.ஐ., எனப்படும், டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில், இந்தியாவுக்கு வெளியில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், யு.பி.ஐ., எனப்படும், டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதன்படி, '2,000 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் நிறுவனங்கள், 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். பரிவர்த்தனை, 75 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் இருந்தாலும் கட்டணம் 300 ரூபாய் என்ற வரம்புக்குள் இருக்கும். ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் ஆகிய அத்தியாவசிய துறைகளில் நடைபெறும் பரிவர்த்தனைக்கு ஒரே கட்டணமாக 5 ரூபாயும், பங்குச்சந்தை வணிகத்துக்கான யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கு 0.02 சதவீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு வெளிநாடுகளின் அழுத்தமே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்டவை குற்றம்சாட்டி இருந்தன. கார்டு ( கிரெடிட் / டெபிட் கார்டு) சேவை வழங்கும் நிறுவனங்களின் பலன் பெறவே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெளியில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக யுபிஐ பணப்பரிமாற்றத்திற்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இது தவறானது. தன்னிறைவு பெற்ற, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் கட்டுப்படியாகக்கூடிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் சூழலமைப்பை உருவாக்கும் தெளிவான குறிக்கோளுடன், இந்தியாவின் யுபிஐ கொள்கை முடிவுகள் சுதந்திரமாக எடுக்கப்படுகின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

srinivasan s
செப் 16, 2026 20:10

இந்த சார்ஜ் மிகவும் மோசமானது அன்புமணி ராமதாஸ் சொல்வது போல் இந்த சார்ஜ் எதற்காக செய்கிறார்கள் ஏற்கனவே பாங்குகள் நிறைய சம்பாத்தியம் பண்ணுகிறார்கள் அதுவும் வாடிக்கையாளர்கள் வயிற்றில் அடித்து சம்பாதிக்கிறார்கள் இதற்கு மேல் மத்திய அரசாங்கம் upi சார்ஜ் போடுகிறார்கள் எந்த விதத்தில் நியாயம் பிரதம மந்திரி மற்றும் நிதி அமைச்சருக்கு சரியான ஆப்போசிஷன் இல்லாததால் அவர்கள் இஷ்டத்திற்கு சராசரி மனிதர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் கொடுக்கிறார்கள் இதை கேட்பதற்கு ஆள் இல்லை இன்னொரு முறை மோடி கவர்மெண்ட் வந்தால் இன்னும் நிறைய சார்ஜ்கள் இருக்கும் எனவே ஒரு ரெஸ்பான்சிபில் ஆப்போசிஷன் நமக்குத் தேவைப்படுகிறது அன்புமணி ராமதாஸ் எழுப்பிய குரலை எல்லோரும் சத்தமாக இந்த கவர்ன்மென்ட் க்கு எழுப்ப வேண்டும்


Tetra
செப் 16, 2026 19:40

போட்டே கிடையாது. நகர சில்லறைதான்


உமாசங்கர்
செப் 16, 2026 19:40

நிர்ப்பந்தம் இல்லை என்றால், இந்த கட்டணம் எதற்கு என்று சொல்ல வேண்டும். டிஜிட்டல் இந்தியாவின் கனவு அவ்வளவு தானா ? எல்லா கட்டணங்களும் கடைசியில் நுகர்வோர் தலையில் தான் விழும். பெட்ரோல் ஒரு லிட்டர் வாங்கும் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோல் விலை போக 5 ரூபாய் கூடுதல் , ஏற்கனவே பல்வேறு வரிகளுக்கு பின் விற்கப்படும் பொருட்களுக்கு கட்டணம் விதிப்பது என்ன வென்று சொல்வது ?


kulanthai kannan
செப் 16, 2026 19:30

இலவசங்களுக்கு நாக்கு தொங்கப் போட்டு அலைவது எப்போது நிற்குமோ?


பாரதன்
செப் 16, 2026 18:28

இந்த முறையான UPI பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் விதிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். தவிர ரொக்க பரிவர்த்தனை மக்களுக்கு சுமையாக மாறும். மத்திய அரசு பரிசீலித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.


தாமரை மலர்கிறது
செப் 16, 2026 18:27

கட்டணம் இன்றி எதையும் இலவசமாக கொடுத்தால், திவால் தான் நேரிடும். இந்த சேவையை மக்கள் மிக அதிகமாக விரும்புகிறார்கள். இந்த சேவைக்கு பணம் செலுத்த விரும்புகிறார்கள். அப்போது தான் இதை மேலும் சிறப்பாக செய்ய முடியும். மத்திய அரசின் இந்த முடிவு பாராட்டத்தக்கது. வரவேற்கத்தக்கது. இலவசம் என்பது எல்லா இடங்களிலும் தவிர்க்கப்படவேண்டும்.


GUNASEKARAN RANGASAMY
செப் 18, 2026 23:01

அப்புறம் எதற்கு பிஹாரில் பெண்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது? யோகி பெண்களுக்கு 50,000 கொடுப்பாராமே? நீங்கள் செய்தால் தவறும் சரி


velan
செப் 16, 2026 18:15

பழயபடி இனி பணத்திற்கு மாற போறேன் . சிம்பிள்


Rangarajan Cv
செப் 16, 2026 17:47

Govt can avoid this levy. While the UPI infra


GMM
செப் 16, 2026 17:45

ரூபே டெபிட், கிரெடிட் கார்டு இந்தியாவின் அட்டை தானே. அதனை பெற மாறிவிடுவோம் காங்கிரஸ். விசா, மாஸ்டர் அட்டை தானே வெளி நாடு. காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் இந்திய அட்டை பயன்படுத்த ஒரு சுற்றறிக்கை விடு காங்கிரஸ். உள்நாட்டு அட்டை இல்லை என்றால் வெளிநாடு அழுத்தம் என்ற காங்கிரஸ் பயம் பொருள் படும்.


அப்பாவி
செப் 16, 2026 17:42

எங்களுக்கே உருவத் தெரியும்.


guna
செப் 16, 2026 19:37

உக்காந்து ஓசி சோறு சாப்பிடும் அப்பாவிகள் இன்னும் இருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை