உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த பயனும் இல்லை!

எந்த பயனும் இல்லை!

பாக்.,கின் பயங்கரவாத ஆதரவு பற்றி விளக்க அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழுவை, உலக நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த குழுக்கள் இந்தியா - -பாக்., பிரச்னையுடன் தொடர்பில்லாத காங்கோ, லைபீரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்கின்றன. இதனால் எந்த பயனும் இல்லை. சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி

திருத்தம் தேவை!

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்து தீவிரமான விவாதம் நடத்தப்பட வேண்டும். இதற்காக ஒரு முறை அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவந்து முடிவு காண வேண்டும். அடிக்கடி நடக்கும் தேர்தல்கள், அரசு இயந்திரத்தின் செயல்பாட்டை பாதிக்கின்றன. தேர்தல் செலவுகளும் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சிவ்ராஜ் சிங் சவுஹான், மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஒப்பிட முடியாது!

பாகிஸ்தானுக்கு ரகசியமாக சென்று வந்த காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய் தன் பயணத்தை, பா.ஜ., மூத்த தலைவர்களான பிரதமர் மோடி, அத்வானி, ஜஸ்வந்த் சிங் பயணங்களுடன் ஒப்பிட முடியாது. அவர்கள் 40 --- 50 அதிகாரிகளுடன் அரசு முறை பயணமாக வெளிப்படையாகச் சென்றவர்கள். ஹிமந்த பிஸ்வ சர்மா,அசாம் முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ