உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்

நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதனை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதே கேள்வி,'' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., என்ற நிறுவனம், 'பெகாசஸ் ஸ்பைவேர்' என்ற உளவு மென்பொருளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இது, 'ஐ - போன், ஆண்ட்ராய்டு' உள்ளிட்ட அனைத்து விதமான இயங்கு தளங்களிலும் எளிதாக ஊடுருவி, உளவு பார்க்கும் திறன் உடையது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sz5atexw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் நம் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பல்வேறு துறையினரும், இந்த பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உளவு பார்க்கப்படுவதாக கடந்த ஆண்டு செய்தி வெளியானது. இது தொடர்பாக, கடந்த 2021ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன. இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் அமைத்து இருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு இன்று( ஏப்.,29) விசாரணைக்கு வந்தது. அப்போது சில மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினேஷ் திவேதி கூறுகையில், இந்த விவகாரத்தில், ஸ்பைவேரை மத்திய அரசு வைத்து உள்ளதா அல்லது வாங்கி உள்ளதா இல்லையா என்பது தான் அடிப்படை பிரச்னை. அரசிடம் இருந்தால், இன்று வரை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது: ஸ்பைவேரை அரசு பயன்படுத்துவதில் என்ன தவறு. ஸ்பைவேரை வைத்து இருப்பது தவறில்லை. யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். நாட்டின் பாதுகாப்பில் சமரசம் அல்லது தியாகம் செய்ய முடியாது என்றார்.இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், பயங்கரவாதிகள், தனியுரிமையை கோர முடியாது என்றார்.அதற்கு நீதிபதி சூரியகாந்த், தனி நபருக்கான தனி உரிமை அரசியல்சாசனத்தின் படி பாதுகாக்கப்பட்டது என்றார்.இதனைத் தொடர்ந்து பெகாசசுக்கு எதிராக வாட்ஸ் அப் செயலி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
ஏப் 30, 2025 08:03

உளவு பாத்திருந்த ரூவா நோட்டே எரிஞ்சிருக்காது.


c.mohanraj raj
ஏப் 30, 2025 07:18

முதலில் நீதித்துறையிலும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்


Barakat Ali
ஏப் 29, 2025 22:01

நாட்டுக்கு எதிரான செயல்களை யார் செய்தாலும் குற்றமே .... ஊழல் கறைபடிந்த நீதிபதிகளைக்கூட கண்காணிப்பது ஒருவிதத்தில் இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையதே .... இந்த வழக்கு ஒருபக்கம் இருக்கட்டும் .... தற்பொழுது மூன்றாவது முறை பாஜக அரசு அமைந்ததால் காங்கிரஸ் வெறுப்பின் உச்சத்துக்கே போய்விட்டது ....


GMM
ஏப் 29, 2025 20:24

ஒரு உளவாளியின் உண்மையான உழைப்பு பெரிய படை பிரிவுக்கு சமம். குற்ற நிழல் படியாத தனி நபருக்கான உரிமைக்கு மட்டும் தான் குற்றவியல் பாதுகாப்பு. அரசியல் சாசனத்தை எல்லா வழக்கிலும் இழுக்க வேண்டாம். குற்ற செயல் புரியாத நபருக்கு எதிராக பயன்படுத்தினாலும், சட்டம் அமுல்படுத்த விடாது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் அல்லது தியாகம் செய்ய முடியாது. அரசு பணி ஆரம்பிக்கும் முன்னால், நீதிமன்றம் மனுவை ஏற்று விசாரிப்பது அரசியல் சாசனம் ஏற்காத நடைமுறை. விதி மீறிய பொருளாதார, தேச பாதுகாப்பு பற்றி விசாரிக்க நீதிபதி இறுதியில் வர வேண்டும்.


Dharmavaan
ஏப் 29, 2025 18:50

தனி நபர் உரிமை குற்றவாளிகளுக்கு பொருந்தாது .காரணம் அவர்கள் பிரான் மனித உரிமையை கெடுப்பதால் மனித உரிமை சட்டப்படி நடப்பவர்க்கே குற்றவாளிகளுக்கு இல்லை அதுவும் கொலை கொள்ளை கற்பழிப்பு போதை மருந்து ஏமாற்றுதல் போன்றவங்களுக்கு மறுக்கப்பட வேண்டும் அப்போதே தருமம் நிலைக்கும்


Suresh
ஏப் 29, 2025 17:47

என்ன ஆச்சரியம்


M S RAGHUNATHAN
ஏப் 29, 2025 17:39

திடீர் என்று ஏன் உச்ச நீதி மன்றம் பல்டி அடிக்கிறது. மோடிக்கு எதிராக சொல்வது தானே வழக்கம். துணை ஜனாதிபதி மருந்து நன்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது.


Paramasivam
ஏப் 29, 2025 18:33

மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்


Barakat Ali
ஏப் 29, 2025 21:58

நீங்கள் நீதிபதி சூரியகாந்த்தின் கருத்தைப் படிக்கவில்லை .... உச்சம் எப்போதுமே நமது இறையாண்மை, அரசின் நியாயமான முடிவுகளுக்கு எதிரானதுதான் ....


என்றும் இந்தியன்
ஏப் 29, 2025 17:31

அதாவது எதிர்க்கட்சிகள் இந்திய நாட்டுக்கு எதிராக செய்யும் கூட்டு சதி இதன் மூலமாக வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தான் இந்த வழக்கு??? வேடிக்கை என்னவென்றால் அந்த வழக்கை தீர்ப்பு சொல்லி நிறுத்தாமல்???அமேரிக்க நீதிமன்ற பிகாஸாஸ் வழக்கு குறித்த தீர்ப்பு வேண்டுமாம் என்று வழக்கை ஒத்தி வைத்ததாம் இந்த அநீதி மன்றம்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஏப் 29, 2025 17:04

தேசத்தின் பாதுகாப்பு முக்கியம். ஊழல் அரசியல் தலைவர்கள் தேசத்தின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட மாட்டார்கள்.


Karthik
ஏப் 29, 2025 16:47

இப்படி வாய் கிழிய எங்களை வேவு பார்க்கிறார்கள் உளவு பார்க்கிறார்கள் கண்காணிக்கிறார்கள் என்று கூறும் சில அறிவிலிகள், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனில் இப்படி கூவ வேண்டிய அவசியம் என்ன?? நீங்கள் நீதிமன்றம் வரை சென்று வாதிடுவதன் மூலம் இந்த இந்திய நாட்டிற்கும் அரசுக்கும் எதிராக ஏதோ செய்கிறீர்கள் என்று தானே பொருள். ஒருவேளை அவ்வாறு ஏதும் நீங்கள் செய்யவில்லை எனில் இந்திய அரசுக்கு எதிராக வழக்காடுவது ஏனோ??


சமீபத்திய செய்தி