உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணு ஆயுத அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

அணு ஆயுத அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

புதுடில்லி: 'எந்தவித அணு ஆயுத அச்சுறுத்தல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.டில்லியில் தே.ஜ., கூட்டணி பார்லி., குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நிறைவேற்றப்பட்ட தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழு கூட்டம் தீர்மானம், அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது ஆப்பரேஷன் சிந்தூர் மற்றும் ஆப்பரேஷன் மகாதேவின் போது நமது ஆயுதப் படைகளின் தைரியத்தையும், துணிச்சலையும் உறுதிப்படுத்துகிறது. * இந்தியா மீதான எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தக்க பாடம் புகட்டும் வகையில், பொருத்தமான பதிலடி கொடுக்கும்.* எந்தவித அணு ஆயுத அச்சுறுத்தல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது.* பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கத்திற்கும், பயங்கரவாதத்தின் மூளையாக இருப்பவர்களுக்கும் இடையில் வேறுபாடு காட்டாமல் தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

MARUTHU PANDIAR
ஆக 06, 2025 02:48

டிரம்புக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. இனி பாகிஸ்தானுக்கு தீவிரவாத "தட்டுப்பு " நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் நிதியை வழக்கத்தை விட டபுள் அல்லது ட்ரிபுள் ஆக்கி அனுப்பி ஊக்கமளிப்பாப்ல. இப்பவே IMF நிதி தானே வேல செய்ய தொடங்கிருக்கு?


Ramesh Sargam
ஆக 05, 2025 21:34

இந்தியாவுக்கு உலக அளவில் பல நாடுகள் ஆதரவு. அப்படி இருக்கையில் இந்தியா மீது போர் தொடுக்கவிரும்பும் நாடுகள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும். சேதாரம் அவர்களுக்குத்தான். அதில் சந்தேகமில்லை.


Anand
ஆக 05, 2025 19:11

மிகச்சிறப்பாக செயல்படும் நமது வெளியுறவுத்துறை... வாழ்த்துக்கள்.


Narayanan Muthu
ஆக 05, 2025 21:12

very good joke.


vivek
ஆக 06, 2025 07:47

our big joker is narayana muthu


vivek
ஆக 06, 2025 07:48

you are filthy stupid joker muthu


ASIATIC RAMESH
ஆக 05, 2025 18:45

சபாஷ்... அப்படியே நம் நாட்டின் தலைப்பகுதியை மீட்டு பழைய வடிவத்திற்கு நீங்கள் பொறுப்பில் இருக்கும்போதே சரிசெய்வீர்கள் என்று இந்தியர்கள் அனைவரும் ஒருமனதாக விரும்புகிறோம். வாழ்த்துக்கள்.....


புதிய வீடியோ