உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிஷப்புக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி துறப்பு

பிஷப்புக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி துறப்பு

கோட்டயம்,: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக, கன்னியாஸ்திரிகளை திரட்டி போராட்டம் நடத்திய அனுபமா, தன் கன்னியாஸ்திரி பணியை துறந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினார்.கேரளாவின் கோட்டயம் அருகே குருவிளங்காட்டில் பழமையான சர்ச் உள்ளது. இது, பஞ்சாபின் ஜலந்தர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டது. அந்த மறைமாவட்டத்தின் பிஷப்பாக பிராங்கோ முலக்கல் பதவி வகித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5ohic4rp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பதவியில் இருந்த 2014 -- 16 காலக்கட்டத்தில் கேரளாவுக்கு பயணம் செய்தார். அப்போது கன்னியாஸ்திரியரை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக அவர் மீது 2018ல் புகார் எழுந்தது.பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிஷப் பிராங்கோவை கண்டித்து, கன்னியாஸ்திரி அனுபமா தலைமையில் அப்போது பெரியளவில் போராட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து பிராங்கோவை கைது செய்தனர். அவர் ஜலந்தர் மறைமாவட்ட பிஷப் பொறுப்பில் இருந்து விலகினார். அவர் மீதான வழக்கை விசாரித்த கோட்டயம் மாவட்ட நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராட்டம் நடத்திய அனுபமா, திடீரென கன்னியாஸ்திரி பணியை துறந்து குருவிளங்காடு கான்வென்ட்டிலிருந்து வெளியேறி, குடும்பத்துடன் இணைந்தார். இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது முடிவுக்கு காரணம் என்ன என்பதை அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

c.mohanraj raj
மே 28, 2025 21:22

கிறிஸ்துவத்தில் எவனும் திருந்த மாட்டான் மத்திய அரசிலும் எவனும் திருந்த மாட்டான்


Rathna
மே 28, 2025 18:01

புத்தகம் போடும் அளவுக்கு சொல்ல முடியாத அளவுக்கு அநியாயம் நடந்தால் எப்படி ?


sugumar s
மே 28, 2025 14:47

She would have been pressurised to withdraw. so many non senses are happening with churches and priests in them


naranam
மே 28, 2025 09:51

உங்களுடைய ஒரிஜினல் தாய் மதத்திற்கு மாறிவிட இதைவிட வலுவான காரணம் எதுவும் வேண்டுமா?


baala
மே 28, 2025 09:40

நாட்டில் எவ்வளவு பேர் நல்லவர்கள்?


Srivilliputtur S Ramesh
மே 28, 2025 04:29

பரிசுத்த கன்னியாஸ்திரி அம்மா, பாதிரியார் பலாத்காரம் செஞ்சதை நீங்க மறந்துடுங்க. பாதிரியார்கள் பல பேர் இதே வேலையைத்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.நீங்க பாட்டுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அளவோட பிள்ளை குட்டிகளைப் பெத்துக்கிட்டு சுகமா, சந்தோஷமா வாழுங்க. வாழ்த்துகள்... ஆமென்


Kasimani Baskaran
மே 28, 2025 04:01

கன்னியாஸ்திரி வாழ்க்கை புளித்துப்போகும் அளவுக்கு மதம் பிடித்த தலைவர்கள்... மேல் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை இதே நிலையில்தான் ரோமன் கத்தோலிக்க சர்ச் நடக்கிறது. கடவுள் சேவையை விட காலித்தனங்கள்தான் அதிகம்.


மீனவ நண்பன்
மே 28, 2025 00:01

ஆணாதிக்கம் நிறைந்த கத்தோலிக்க சர்ச்கள் ...போப் ஆக கன்னியாஸ்திரி போட்டியிடமுடியாது ,,,வாக்களிக்க முடியாது ....பாதிரிமார்கள் அங்கிக்குள் ஜீன்ஸ் டி சர்ட் அணிவதுண்டு ...


Ramesh Sargam
மே 27, 2025 23:21

எல்லா மதங்களிலும் கல்லுளி மங்குணிகள் உள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை