உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வழங்குகிறது ஒடிசா அரசு

பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வழங்குகிறது ஒடிசா அரசு

புவனேஸ்வர்: '' பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் நிதி வழங்கப்படும்,'' என ஒடிசா மாநில அரசு அறிவித்து உள்ளது.கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு, சமூகப்பணி, பொது சேவை, மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 105 பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அதில் 90 பேர் பத்மஸ்ரீ விருதுகளையும், 11 பேர் பத்ம பூஷன் விருதுகளையும், நான்கு பேர் பத்ம விபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஒடிசா மாநில இலக்கியம் மற்றும் கலாசாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமூகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, பத்ம விருது வாங்கியவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விருதை பெற்றவர்களுக்கு, இம்மாதம்(2025ஜன.,) முதல், அவர்கள் உயிருடன் இருக்கும் வரை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.இதற்காக, பத்ம விருது பெற்றவர்களின் விவரம், கலெக்டர் வழங்கும் சான்றிதழ், வங்கிக்கணக்கு விவரம், ஐஎப்எஸ்சி விவரம் ஆகியவற்றை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போது ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள அரசு, பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. ஆனால், இது அமல்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு நவ., மாதம் தற்போதைய முதல்வர் மோகன் சரண் மஜி, இந்த நிதி ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். தற்போது, இதற்கான உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜன 17, 2025 09:22

அங்கே பிச்சையெடுக்கும்.மக்கள்.இருந்தாலும் இதுக்கெல்லாம் காசுக்கு குறைச்சலில்லை.


V RAMASWAMY
ஜன 17, 2025 08:30

மத்திய அரசால் கொடுக்கப்படும் இம்மாதிரி விருதுகளுக்கு ஒரு வரைமுறைக்குள் மத்திய அரசே மாத ஊதியம் வழங்கலாம். ஒரு மாநிலம் வழங்குகிறது, மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கின்றன, இது பாரபக்ஷமில்லையா ?


நிக்கோல்தாம்சன்
ஜன 17, 2025 07:02

வரவேற்கிறேன்


Kasimani Baskaran
ஜன 17, 2025 07:00

ஓவராக கொடுத்தால் தமிழகம் போல நொண்டிக்காரணங்களை சொல்லி ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி போன்ற பல வங்கிகளிடம் கடன் வாங்கி கடன் சுமையை அதிகரிக்க வேண்டிவரும்...


Kundalakesi
ஜன 17, 2025 00:52

மணிலா பட்ஜெட்டில் நிதி உள்ளதா. மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற பட்டதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை