உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதவி கலெக்டர் அலுவலகம் ஜப்தி

உதவி கலெக்டர் அலுவலகம் ஜப்தி

சிக்கபல்லாபூர்: சாலை விரிவாக்க பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்காததால், சிக்கபல்லாபூர் உதவி கலெக்டர் அலுவலக பொருட்கள் நேற்று ஜப்தி செய்யப்பட்டன.சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி டவுனில் உள்ள தாலுகா நீதிமன்றத்தில் இருந்து தேசிய கல்லுாரி வரையிலான டி.வி.ஜி., சாலை கடந்த 2006ம் ஆண்டு அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலையில் 390 கடைகள் உள்ளன. சாலை விரிவாக்க பணிகளுக்காக, கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு உள்ள இடங்களை கொடுத்தனர். இதற்கு ஒரு சதுர அடிக்கு 280 ரூபாய் இழப்பீடு என்று நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால் 32 வியாபாரிகள், 'இழப்பீடு தொகை குறைவாக உள்ளது. அதிகம் தர வேண்டும்' என சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு சதுர அடிக்கு 850 ரூபாய் என்று நிர்ணயம் செய்தது. இதிலும், ஒன்பது கடைக்காரர்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், பாகேபள்ளி டவுனில் உள்ள உதவி கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று காலை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள் நாற்காலிகள், மேஜைகள், கணினிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை