உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்... ஜன்னல் வழியே பணக்கட்டுகளை தூக்கி வீசிய அரசு இன்ஜினியர்

ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்... ஜன்னல் வழியே பணக்கட்டுகளை தூக்கி வீசிய அரசு இன்ஜினியர்

புவனேஸ்வர்: ஒடிசாவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்து, ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசிய அரசு தலைமை இன்ஜினியரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.புவனேஸ்வரில் ஊரக வளர்ச்சிப் பணிகள் துறையின் இன்ஜினியராக பணியாற்றி வருபவர் பைகுந்த் நாத் சாரங்கி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kchcc5yw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சோதனையின் ஒரு பகுதியாக, புவனேஸ்வரில் உள்ள வீட்டில் அதிகாரிகள் வருவதை அறிந்த சாரங்கி, டக்கென ரூ.500 பணக்கட்டுகளை ஜன்னல் வழியில் தூக்கி எறிந்துள்ளார். இதனைக் கண்ட அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.2.1 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Sampath Kumar
மே 30, 2025 21:36

Wh have more laws to stop bribe, but no use that law, only god to save our nation


Srinivasan Alagu
மே 30, 2025 21:28

பொறியியல் படித்து எதற்காக ஆகுது. பண்பில்லை என்றால் தான் இது போல் நடக்கும். பண்பற்றவர்கள் உலகில்.


Ramesh Sargam
மே 30, 2025 20:25

சில நாட்களுக்கு முன்பு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதுபோல ரூ. 200, ரூ. 500 நோட்டுக்களை பணமதிப்பிழப்பு செய்து வாபஸ் கொடுக்கச் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இதுபோன்ற கிரிமினல்கள் மேலும் பலர் நாடு முழுவதும் மாட்டுவார்கள்.


Pandiya Pillai
மே 30, 2025 21:59

500 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை பணம் மதிப்பிழப்பு செய்தால் மத்திய அரசு பேரம் பேசி பணம் பறிமாறிக் கொள்வர். இதெல்லாம் ராஜநிதி khel.


V GOPALAN
மே 30, 2025 20:05

He should have taken advice from our Senthil Balaji


c.mohanraj raj
மே 30, 2025 19:27

இவரை போன்றவர்களை வைத்துக்கொண்டு நாடு வளர்ச்சி அடையவில்லை அடையவில்லை என்றால் எப்படி அடையும்


sankaranarayanan
மே 30, 2025 18:48

ஒரு நீதிபதி பணக்கட்டுகளை தனது வீட்டிலேயே எரியவிட்டார்.இன்னொரு அதிகாரி ரூ.500 பணக்கட்டுகளை ஜன்னல் வழியில் தூக்கி எறிந்துள்ளார். இன்னொரு அரசியல்வாதி அமெரிக்காவில் வாஷின்டான் நகரிலேயே திராவிட மாடல் அரசின் அமைச்சரின் உதவியால் ஒரு பெரிய மாளிகையை கட்டி முடித்துள்ளார் இது இப்படியே சென்றால் மக்கள் எல்லோரும் இளிச்ச வாயர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்களே


Rajpal
மே 30, 2025 20:22

இவர்களுக்கு ஓட்டுப் போட்டு பதவியில் அமர்த்திய நாம் இளிச்சவாயன்கள் தானே. இனியும் சந்தேகம் வேறயா?


D.Ambujavalli
மே 30, 2025 17:57

இது ஒன்றும் புதிதில்லை நான் சென்னையில் இருக்கும்போது, எங்கள் அடுத்த flat இல் இருந்த ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி வீட்டுக்கு ல. ஒ அதிகாரிகள் வந்தனர். அந்த வீட்டு சமையல்கார அம்மா, வெகு புத்திசாலி வீட்டுப் பிள்ளைகள் எதற்கோ சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை அதட்டித் திட்டிவிட்டு, பள்ளிக்கூட பைகளை ஜன்னல் வழியாக வீசியெறிந்து, கூடவே ஒரு தோல் பையையும் வீசியெறிந்தார். அவரின் நண்பர் ஒருவர், கீழ் வீட்டில் இருந்தவர், அவர்களுக்குள் என்ன புரிந்துணர்வோ, அவர் பைகளை பத்திரப்படுத்தி வைத்து, சோதனைகள் எல்லாம் முடிந்த பின் அவரிடம் ஒப்படைத்தார். ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமோ’ இல்லையோ, இந்த அதிகாரிகளின் வீடு டிரைவர் , வேலையாட்கள் வெகு sharp and smart ஆக செயல்படுகிறார்கள் ஆனால் ஒன்று, அவர்களை மட்டும் எதிர்த்துக்கொண்டால் , அத்தனை ‘ரகசியங்களும்’ சந்திக்கு வந்துவிடும்


R ZAMEER KHAN
மே 30, 2025 17:45

அங்கே டபுள்.இஞ்சின் சர்க்கார் நடக்குது ஹைன். டபுள் கலெக்‌ஷன் ஹைன்.


Training Coordinator
மே 30, 2025 17:25

பாஜக ஆட்சியில் இதெல்லாம் சகஜம்


Keshavan.J
மே 30, 2025 17:40

எல்லாம் மாநிலத்திலும் திமுக போல நல்ல ஆட்சி கொடுக்க முடியுமா. அவர் 500 ரூபாய் நோட்டு கட்டு. நாம ஒரு பாட்டலுக்கு 10 ரூபாய் தான் வாங்குவோம். நிலத்தை சுரண்டி என்ன ஒரு 5000 கோடி சில்லறை காசு திருடுவோம். ஈடி ரைட் வந்தா வெளிநாட்டுக்கு ஓடுவோம். உன் அப்பா கிட்ட சொல்லி இது மாதிரி ரைட் விட சொல்ல முடியுமா உன்னாலே.


பெரிய ராசு
மே 30, 2025 18:48

திருட்டு மூர்க்கன்ஸ் பூராம் புனைபேர்ல எழுதுறாங்கோ


என்றும் இந்தியன்
மே 30, 2025 17:01

இன்ஜினியராக பணியாற்றி வருபவர்????ரூ.500 பணக்கட்டுகளை ஜன்னல் வழியில் தூக்கி எறிந்துள்ளார்??? சோதனையில் மொத்தம் ரூ.2.1 கோடியை பறிமுதல் செய்தனர்??? என்ன நடக்கின்றது பறிமுதல் ரூ 2.1 கோடி என்றால் நிஜத்தில் எவ்வளவு கோடி என்று தெரியவில்லை??


சமீபத்திய செய்தி