உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா: அஞ்சலி நிகழ்ச்சியில் பரபரப்பு

சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா: அஞ்சலி நிகழ்ச்சியில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, போலீசார் தடுத்ததால் சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 1931ம் ஆண்டு மகாராஜா ஹரிசிங் ஆட்சிக்கு எதிராக போராடிய 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 13ல் ஜம்மு காஷ்மீரில் அரசியல்வாதிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம் . 2019ம் ஆண்டு பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்த தினம் பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j46l6mkn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தாண்டு காஷ்மீரில் குறிப்பிட்ட அந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் உமர் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் உள்ளார். நேற்று அவர் அஞ்சலி செலுத்த நினைவிடத்துக்குள் செல்ல முயன்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.இந்நிலையில் இன்று (ஜூலை 14) மீண்டும் உமர் அப்துல்லா நினைவிடம் செல்ல முயன்றபோது அவரை உள்ளே செல்ல விடாமல் போலீசார், நுழைவு வாயிலை பூட்டினர். தடுக்கப்பட்டதால் சுவர் ஏறி குதித்து நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.உமர் அப்துல்லா சுவர் ஏறி குதித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெகு வேகமாக பரவியது. யாரும் எதிர்பாராத வண்ணம், அவர் திடீரென சுவர் ஏறி உள்ளே குதிக்க, அதை தடுக்க முடியாமல் போலீசார் திகைத்து போயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Keshavan.J
ஜூலை 15, 2025 16:56

ஒரு தீவிரவாதி இன்னொரு தீவிரவாதிக்கு அஞ்சலி செலுத்துவான். இதில் என்ன அதிசயம் . உமர் அப்துல்லாஹ் ஒரு பசுத்தோல் போர்த்தியா ஓநாய்.


ஆரூர் ரங்
ஜூலை 14, 2025 19:38

அஞ்சலி என்பது வெறும் அரசியல்.


தாமரை மலர்கிறது
ஜூலை 14, 2025 19:25

வெறும் காஷ்மீரில் மட்டுமே நடந்து வந்த நிகழ்ச்சியை தடை செய்ததன் விளைவு, இன்று இந்திய அளவிற்கு வெட்டவெளிச்சமாகிவிட்டது. சில செயல்களை செய்வதற்கு முன், பரிசீலிப்பது நல்லது.


Nagarajan S
ஜூலை 14, 2025 19:13

இவர் ஒரு மாநில முதல்வர் என்ற அந்தஸ்து இல்லாமல் சுவர் ஏறி குதித்தால் இவரை மக்கள் எப்படி மதிப்பார்கள்


அசோகன்
ஜூலை 14, 2025 18:11

இந்தி கூட்டணியே இப்படித்தான் ஒழுக்கம் என்பது அவர்களுக்கு விஷம் போன்றது..... அடாவடிரவுடித்தனம் என்பது இனிப்பு போல


sankaranarayanan
ஜூலை 14, 2025 18:08

இப்படிப்பட்டவர்தான் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்க வேண்டுமா அதான் அங்கே தீவிரவாதிகள் இவரைப்பின்பற்றி எல்லாமே செய்கிறார்கள் இவர் ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவிக்கே தகுதி அற்றவர் என்பதை அவரே நிரூபித்து காட்டிவிட்டார் இன்னும் என்ன வேண்டும்


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஜூலை 14, 2025 17:46

முதல்வரை வீட்டு காவலில் வைக்கலாமா ? மக்கள் போராடியது மன்னர் ஆட்சிக்கு எதிராக. அதில் உயிர் இழந்தவர்களை நினைவு கூர தடை எதற்கு


ஆரூர் ரங்
ஜூலை 14, 2025 18:31

நாட்டுக்கு எதிரான போராட்டம் செய்தால் முதல்வரானாலும் கட்டுப்படுத்தத்தான் வேண்டும். ஹரி சிங்குக்கு பதில் ஒமர் செய்வது குடும்ப முடியாட்சி.


SVR
ஜூலை 14, 2025 18:37

மன்னர் ஆட்சி ஜனநாயக ஆட்சியை விட எந்த விதத்தில் குறைந்தது? ஒரு யூனியன் டெரிடோரிஇன் முதல்வர் என்பவர் எல்ஜி போட்ட உத்தரவை மீறி இப்படி செய்தால், சட்டம் ஒழுங்கை மற்ற மக்களின் மீது எப்படி அமல் படுத்தமுடியும்? ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். இது நல்லதிற்கு இல்லை. எப்பொழுது ஜம்மு காஷ்மீர் 370 அரசியல் அமைப்பு சட்டம் இல்லாமல் போனதோ அப்பொழுதே பாரதத்தின் எல்லா சட்டங்களும் அங்கு அமலுக்கு வந்தாயிற்று. இந்த உமர் எந்த அரசியல் அமைப்பை காப்பேன்.என்று அதே சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்தாரோ அதையே மதிக்காமல் இப்படி செய்திருக்கிறார். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்கிற ஒன்று எல்லா காலங்களுக்கும் மற்றும் எந்தவித ஆட்சிக்கும் பொருந்தும்.


எஸ் எஸ்
ஜூலை 14, 2025 19:09

மன்னர் ஹிந்து என்பதையும் பாகிஸ்தானுடன் இணைய மறுத்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்


Anand
ஜூலை 14, 2025 17:36

அவன் கைகால் ஏதும் முறியவில்லையா?


theruvasagan
ஜூலை 14, 2025 17:15

சுவர் ஏறி குதிப்பதில் நல்ல அனுபவஸ்தர் போல.


Padmasridharan
ஜூலை 14, 2025 17:11

சிறப்பு வாழ்த்துகள்.. வீட்டுக் காவல்ல இருந்தவரு எப்படி வெளியில வந்தாரு சாமி..