உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 53 சதவீத 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே 10ம் வாய்ப்பாடு தெரிகிறது!

53 சதவீத 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே 10ம் வாய்ப்பாடு தெரிகிறது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : நாடு முழுதும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 53 சதவீதம் பேருக்கு மட்டுமே, 10ம் வாய்ப்பாடு வரை சொல்லும் திறன் இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.நாடு முழுதும், மூன்று, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறன் குறித்து, மத்திய கல்வி அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.மத்திய, மாநில அரசுகள், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் 74,229 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. 21 லட்சத்து, 15 ஆயிரத்து, 22 மாணவர்கள், 2.70 லட்சம் ஆசிரியர்கள் ஆய்வில் பங்கேற்றனர். நாடு முழுதும், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 781 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பங்கேற்றன. அந்த ஆய்வு முடிவின் விபரம்:மூன்றாம் வகுப்பு படிக்கும் 55 சதவீத மாணவர்கள் மட்டுமே, ஒன்று முதல் 99 வரை, ஏறு மற்றும் இறங்கு வரிசையில் சரியாக வரிசைப்படுத்துகின்றனர். 58 சதவீத மாணவர்களால் மட்டுமே இரண்டு இலக்க கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை சரியாக போட முடிகிறது.மேலும், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 53 சதவீதம் பேருக்கு மட்டுமே 10ம் வாய்ப்பாடு வரை தவறின்றி சொல்லும் திறன் உள்ளது.மத்திய அரசு பள்ளியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கணக்கு பாடத்தில் குறைந்த திறனுடன் உள்ளனர். மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கணக்கு பாடத்தில் பலவீனமாக உள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தினர். குறிப்பாக, மொழிப் பாடத்தில் சிறந்து விளங்குகின்றனர். தனியார் பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் சிறந்து விளங்கினாலும் கணிதத்தில் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhaskaran
ஜூலை 10, 2025 03:34

இதில் தமிழ்நாடு எப்படி கடைசியா?


Neelachandran
ஜூலை 09, 2025 12:57

இருப்பதிலேயே 10ம் வாய்பாடுதான் சுலபமானது.யாரைக் குறை சொல்வது.கற்பித்தல் திறன் இன்மையா?கற்றல் திறன் இல்லையா?


ponmurugan
ஜூலை 09, 2025 11:02

தமிழக அரசு கல்வித் துறைக்கு எவ்வளவு நிதி செலவு செய்தாலும் பிரயோஜனம் ஒன்றுமில்லை ஆசிரியர்களை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் நிர்வாகத்தை கட்டுப்படுத்த வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே கல்வி அரசு பள்ளிகள் வெற்றியடைய செய்ய முடியும் இதற்காக ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் தனியார் நிர்வாகத்துடன் இணைக்க வேண்டும்


Chandru
ஜூலை 09, 2025 09:46

It s big shame. Actual position in TN will be more severe. My neighbour who is in class viii in matriculation school is not able to come with 7 . When we studied we had to repeat s from 1 to 16 which we did with ease. State board education is in a miserable shape


ASIATIC RAMESH
ஜூலை 09, 2025 09:06

10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கே 3ம் 4ம் வாய்ப்பாடுகூட தெரியவில்லை..... எப்படித்தான் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துகின்றனரோ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...


Ravi
ஜூலை 09, 2025 08:57

All Pass


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 07:41

ஒரு பட்டதாரி? முதல்வருக்கும் 87 பிளஸ் 9 தெரியவில்லை. மன்னன் எவ்வழி..


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 09, 2025 07:38

செய்தியை நம்புவதற்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. .குன்றிய நாட்டு மக்களில் பெரும்பாலோர், அதாவது 53 சதவீதத்துக்கும் மேல், பாட்டிலுக்கு பத்து ரூபா என கணக்கிட்டு சரியாகத்தானே கொடுக்கிறார்கள். கணக்கில் தவறுவது இல்லையே


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 09, 2025 07:24

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. காலம் பொன் போன்றது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இழந்த காலத்தை திரும்ப பெற முடியாது. குட்டி சமஸ்தானத்தில் ராஜாவாகவே இருக்க விரும்பும் ஒரு மன்னனால் எப்படி பெரிய நாட்டிற்கு அரசனாக முடியும். குறுக்கு வழியில் பிழைப்பு நடத்துபவர்களுக்கு நெடுஞ்சாலைகள் பிடிக்காது. குஜராத்தில் மோர்பி என்னும் கிராமம் ஐம்பதாயிரம் கோடி விற்று முதல் காண்கிறது. அங்கே தொழிற்சாலைகளுக்கு நடுவே மதில் சுவர் கிடையாது மற்றவர்கள் டிசைனை காப்பி அடிக்க தடை கிடையாது. ஆனால் இங்கே அரசியல் வாதிகள் அதிகாரிகளை திருப்தி செய்தால் மட்டுமே பெட்டிக்கடை சாலையோர கடைகள் கூட நடத்த முடியும். சந்தையில் நூறு ரூபாய்க்கு கீரை விற்கும் வயதான மூதாட்டி கூட அரசியல் வாதிக்கு படி அளந்தால் தான் பிழைக்க முடியும். கல்விச் சாலைகள் ஒழுங்காக இருந்திருந்தால் இந்த நிலைமை இங்கு வந்திருக்குமா.


Ram
ஜூலை 09, 2025 06:57

திராவிட மாடல் கல்வி எல்லாவற்றையும் பெரிது என்று பீத்திக்கொண்டார்களே , நிலைமை ரொம்ப மோசமாய் இருக்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை