உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லி.,யில் விவாதம்: ஜூலை 29ல் பதிலளிக்கிறார் பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லி.,யில் விவாதம்: ஜூலை 29ல் பதிலளிக்கிறார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நடக்கும் விவாதத்தில் வரும் செவ்வாய் ( ஜூலை29) அன்று பிரதமர் மோடி பதிலளித்துப் பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தான் மீது நடவடிக்கையை துவக்கிய மத்திய அரசு அதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைத்தது. இதன் கீழ் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது நமது முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில் அந்நாட்டு விமானப்படை தளங்கள் சேதம் அடைந்தன. இதனால் தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது.இதனையடுத்து தாக்குதல் நிறத்தப்பட்டது. ஆனால், இந்த தாக்குதலை நிறுத்தியது நான் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முறை கூறி வருகிறார். ஆனால், இதனை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.இந்நிலையில்,பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. இதில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. 16 மணி நேரம் விவாதம் நடக்கும் என அறிவித்தது. இந்த வாரம் இந்த விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அடுத்த வாரத்துக்கு இந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வரும் செவ்வாய்க்கிழமை அன்று ' ஆபரேஷன் சிந்தூர்'குறித்து ராஜ்யசபாவில் அடுத்த வாரம் நடக்கும் எனவும், அதற்கு வரும் செவ்வாய்க்கிழமை அன்று பிரதமர் மோடி பதிலளித்துப் பேசுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 23, 2025 21:47

ட்ரம்ப் என்ன சொன்னாரு ... இவரு என்ன சொன்னாரு ...உண்மையான பதில் ..... நேர்மையான பதில் .... அவ்ளோ தான் ..... ட்ரம்ப் சொல்லி போரை நிறுத்தினார்களா இல்லையா ??? ஒரே நேரடியான பதில் ..... அப்புறம் நம்ம இழப்புகள் என்ன என்ன ???? முதல் எண் கொண்ட ரஃபெல் விமானம் இழப்பா இல்லையா ???நேர்மையான பதில் .... தேசபாதுகாப்பு என்று ஜல்லியடித்தாருன்னா .....அதைவிட கேவலம் எதுவுமே இருக்காது .....தீவிரவாதிகளை பிடிக்க என்ன வேலை நடக்குது ??? இதுக்கும் பதில் வேணும் ......


K.n. Dhasarathan
ஜூலை 23, 2025 21:23

பிரதமர் " ஆபரேஷன் சிந்தூர " பற்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம், அவரது கடமை, மக்கள் கேட்குமுன் பேசியிருந்தால் சிறப்பு


Shankar
ஜூலை 23, 2025 21:01

எதிர்க்கட்சிகள் என்னதான் சொல்ல விரும்புகிறார்கள்? பாரதம் எதற்காக பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது என்று கேட்கிறார்களா? பாகிஸ்தான் மீது போர் தொடுத்ததால் இவர்களுக்கு என்ன கஷ்டம்? நம்நாட்டில் இருந்துகொண்டே எதிரி நாட்டுக்கு ஆதரவளிக்கும் தீயவர்கள் பாரதத்தில் தான் அதிகம்பேர்.


Sudha
ஜூலை 23, 2025 20:32

28ம் தேதி ராகுல் அமெரிக்கா வுக்கு ஜுட்


M Ramachandran
ஜூலை 23, 2025 18:20

இது எதிரி பாகிஸ்தானுக்காக இங்கு வாதாடும் கட்சிகளுக்கு தேவையற்றது. ஆனால் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளது.


முதல் தமிழன்
ஜூலை 23, 2025 17:04

என்ன விவாதம்? ஆஹ் ஊஹ் அவ்ளோதான் பாக்கிஸ்தான் என்றார்கள். ஆனால் ஒரு நம்பும்படியாக செய்தியோ படங்களோ இல்லை. கெஞ்சியதால் பாக்கிஸ்தான் தப்பியது இல்லையேல் முழு பாகிஸ்தானும் காலியாகிருக்கும் . நல்ல வேளை கெஞ்சுனானுங்கோ. நாமளும் விட்டுட்டோம்.


Sudha
ஜூலை 23, 2025 21:05

இந்த நிலை என்று மாறும்?


முக்கிய வீடியோ