உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நடவடிக்கை தீவிரம்: ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சல் 2 பேர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நடவடிக்கை தீவிரம்: ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சல் 2 பேர் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரூ. 6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சல் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.சத்தீஸ்கரில் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. நாராயண்பூரின் அபுஜ்மட் வனப்பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q0hodxsh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு பதுங்கியிருந்து நக்சல்கள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட்டுகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.6 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கரில், நக்சலைட்டுகள் 214 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nada Rajan
ஜூன் 27, 2025 07:15

பெண்களும் நக்சல் அமைப்பில் இணைவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது


Nada Rajan
ஜூன் 27, 2025 07:14

நக்சலிசம் ஒழிக்கப்பட வேண்டும்


Nada Rajan
ஜூன் 26, 2025 23:40

நக்சலிசம் மனித குலத்திற்கு ஆபத்து


Nada Rajan
ஜூன் 26, 2025 23:39

அமித்ஷா சொனவாறு நக்சலிசம் ஒழிக்கணும்..


சமீபத்திய செய்தி