வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Speak about something else it is over.
புதுடில்லி:''ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து பயங்கரவாத செயல்களுக்கும் காரணம் பாகிஸ்தான் என்பது அம்பலமானது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.கடந்த 1965ல் தோற்றுவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்புப் படை, உலகின் அதிக எண்ணிக்கையிலான எல்லை பாதுகாப்புப்படை என்ற பெருமையை பெற்றுள்ளது. தாக்குதல்
அந்த அமைப்பை தோற்றுவித்து, முதல் தலைமை இயக்குநராக இருந்தவர், கே.எப்.ரஷ்டம்ஜி. அவர் நினைவாக, டில்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக அந்நாட்டில் இருந்த பயங்கரவாத முகாம்களை தகர்த்தோம்.அதற்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' என பெயரிடப்பட்டது. அந்த தாக்குதலுக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் காரணம், பாகிஸ்தான் என்பது சர்வதேச அளவில் அம்பலமானது.ஏனெனில், நாம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஒன்பது இருப்பிடங்களைத் தான் தாக்கினோம். பாகிஸ்தான் ராணுவத்தையோ, விமானப்படையையோ அல்லது குடிமக்களையோ தாக்கவில்லை. ஆனால், பயங்கர வாதிகளுக்கு ஆதரவாக நம் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை நம் வீரர்கள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்தன. முக்கிய பங்கு
நம் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களும், தீரத்துடன் போராடி, ஒரு பயங்கரவாதியை கூட நம் நாட்டிற்குள் ஊடுருவ விடவில்லை.நம் நாட்டை பாதுகாப்பதில், எல்லை பாதுகாப்புப்படை முக்கிய பங்காற்றுகிறது. தேச பக்தியுடன், தீரமாக செயல்படும் இந்த அமைப்பு உலகின் தலைசிறந்த துணை ராணுவமாக திகழ்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
Speak about something else it is over.