உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூர்: நாடு முழுதும் போர் ஒத்திகை

ஆபரேஷன் சிந்தூர்: நாடு முழுதும் போர் ஒத்திகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், நாட்டின் முக்கிய இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. கல்பாக்கத்தில் வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். https://www.youtube.com/embed/edTXHIzlDF8புதுச்சேரி லாஸ்பேட்டையில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மிகப்பெரிய கட்டமைப்புகளுக்குள் தாக்குதல் நடக்கும் போது, மின் விளக்குகளை அணைத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வது போன்ற ஒத்திகைகள் நடந்தன.தலைநகர் டில்லி, மும்பை, ஹிமாச்சல பிரதேசத்தின் ஷிம்லா உள்ளிட்ட இடங்களிலும் போர்க்கால ஒத்திகை நடந்தது. இங் குசைரன்களை ஒலிக்கச் செய்து, மக்களை ஓரிடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்று செய்து காட்டப்பட்டது. போர்ச்சூழலின் போது மக்கள் எப்படி நடந்து கொள்ள முடியும் என்பது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லாவில் சைரன் ஒலிக்கவிட்டது. மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக டில்லியில் இரவு 8:00 மணி முதல் 8:15 மணி வரை மின்சாரம் ரத்து செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தீவிரமாக நடந்தது. கயிறு மூலம் உயரமான கட்டடங்களுக்குள் இருந்து மக்களை இறக்கியும், வெடி சத்தம் கேட்டதும் எவ்வாறு இருந்த இடத்தில் தரையில் அப்படியே படுத்துக் கொள்ள வேண்டும் என செய்து காட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karthik
மே 07, 2025 23:05

நாட்களை எண்ணி கொள்ளவும். முகமூடி அணிந்த உள்நாட்டு துரோகிகளை களை எடுத்து ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. பிறகு தெரியும் இந்தியாவின் பெருமை.


முக்கிய வீடியோ