உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ந்த நாடாக மாற்ற பாடுபடும் 140 கோடி இந்தியர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

வளர்ந்த நாடாக மாற்ற பாடுபடும் 140 கோடி இந்தியர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ''நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுகிறார்கள்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் நாடு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற, இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுகிறார்கள். இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eqm3qrb0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உற்பத்தி துறை

உலக அளவில் உற்பத்தி துறையில் இந்தியா முன்னேறி வருகிறது. இன்று (மே 26) இதே தேதியில் 2014ம் ஆண்டு நான் முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்றேன். குஜராத் மக்கள் என்னை ஆசீர்வதித்தனர். பின்னர் கோடிக்கணக்கான இந்தியர்கள் என்னை ஆசீர்வதித்தனர். நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

உள்நாட்டு பொருட்கள்

ஹோலி, தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட்போன்கள், வாகனங்கள், பொம்மைகள், ஆயுதங்கள், மருந்துகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறோம். இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம். குஜராத்தில் ரயில்வே நெட்வொர்க்கின் 100 சதவீத மின்மயமாக்கல் நிறைவடைந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்

நான் இங்கு வருவதற்கு முன்பு வதோதராவில் இருந்தேன், ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வந்திருந்தனர்.அவர்கள் இந்திய ஆயுதப் படைகளைக் கொண்டாட வந்திருந்தனர். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு.

எவ்வளவு கடினம்

மோடியை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை பயங்கரவாதிகள் கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். பஹல்காம் தாக்குதலின் படங்களைப் பார்த்து ரத்தம் கொதிக்கிறது. எனவே நம் நாட்டு மக்கள் விரும்பியதைச் செய்தேன். மக்கள் தான் என்னை பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராஜா
மே 26, 2025 18:33

பாவம் அவர்கள் மாநில நலன் சார்ந்து பேசுவது தவறு இல்லை


venugopal s
மே 26, 2025 18:04

ஒரே ஒருவரைத் தவிர!


vivek
மே 27, 2025 06:07

உன்னை இதில் சேர்க்கவில்லை வேணுகோபால் கொத்தடிமை


m.arunachalam
மே 26, 2025 17:36

நம்மை நாம் ஏமாற்றிக்கொள்ள அவ்வப்போது இவ்வாறான அறிவிப்புகள் தேவை .


Kanagaraj M
மே 26, 2025 17:15

நீங்கள் உருட்டுங்கள் ,உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்கதான் ஜெயிப்பீர்கள் ....


vivek
மே 26, 2025 17:31

டாஸ்மாக் கனகராஜுக்கு இவளோ கவலை


A.C.VALLIAPPAN
மே 26, 2025 17:12

always crying for petrol price last three years how many time price increased. or congress if they come to power petry , dissel is free just always dont cry take 200 and drink in tarmac maximum happiness you will get. just notice the development


Sekar
மே 26, 2025 17:10

இந்தியா வளர்ந்த நாடக வேண்டுமென்றால் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள படவேண்டும். இந்திய மக்கள் தொகை கட்டுப்படுத்த படவேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறு குறு தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வாய்ப்புகள் கொடுக்க படவேண்டும். விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் மேம்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த பண்புகளுடன் கூடிய உலகத்தரமான கல்வி உள் நாட்டிலேயே குறைந்த செலவில் கிடைக்குமாறு வழி வகை செய்தல் வேண்டும்.


m.arunachalam
மே 26, 2025 17:02

நாம் வளர்ந்த நாடு என்று நினைத்து கொண்டு இருக்கும் நாடுகளில் மக்களின் நிலை ஆணிவேர் இல்லாத தாவரங்களின் நிலைதான். ஒழுக்கம், கண்ணியம், உழைப்பு, நேர்மை மற்றும் பண்பாடு ஆகியவற்றை மக்களிடம் பழக்கப்படுத்தும் செயல்கள் தான் உண்மையான வளர்ச்சி . தெளிதல் நலம்.


P. SRINIVASAN
மே 26, 2025 16:39

வருடத்திற்கு 2கோடி வேலைவாய்ப்பு எங்கே? பெட்ரோல், டீசல், காஸ், GST, விலைவாசி உயர்வு... இப்படி மக்கள் ப்ரிச்சனை ஏராளம்.


Kanagaraj M
மே 26, 2025 17:13

சரியான கேள்வி


Barakat Ali
மே 26, 2025 15:32

அத்தனை இந்தியர்களுமா பாடுபடுறாங்க ????


J.Isaac
மே 26, 2025 17:45

படாத பாடு படுகிறார்கள்


J.Isaac
மே 26, 2025 17:47

எத்தனை காலம் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, இந்த நாட்டிலே.


M. PALANIAPPAN, KERALA
மே 26, 2025 15:15

மக்கள் எப்பொழுதும் மோடிஜியின் கூடவே உள்ளார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை