உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சியும் எதிர்க்கருத்துக்களும் மத்திய அரசுக்கு பிரச்னை: கனிமொழி

எதிர்க்கட்சியும் எதிர்க்கருத்துக்களும் மத்திய அரசுக்கு பிரச்னை: கனிமொழி

புதுடில்லி: ''எதிர்க்கட்சியும், எதிர்க்கருத்துகளும் மத்திய அரசுக்கு பிரச்னையாக உள்ளது,'' என தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறினார்.டில்லியில் நிருபர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது: தொகுதி மறுவரையறை குறித்து பேசவோ, விவாதிக்கவோ பார்லிமென்டில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், இன்று பார்லிமென்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு உள்ளே சென்று கோரிக்கை வைத்தோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qmp524zv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் முன் எப்போதும் இல்லாத வகையில் எங்கள் உடையில் குறையை கண்டுபிடித்த சபாநாயகர், டீசர்ட் அணிந்து வரக்கூடாது. சட்டையை மாற்றாமல் லோக்சபா நடக்காது என்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சட்டத்தை முன் வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபா மீண்டும் கூடிய போது நாங்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.இதற்கு முன்னரும் எதிர்க்கட்சியினர் மாஸ்க் அணிந்து வந்துள்ளனர். அதில் அவர்களின் கருத்துக்கள் வாசகங்களாக இடம்பெற்று இருந்தன. அதேபோல் சால்வை ஆடை அணிந்து வந்துள்ளனர்.ஆளுங்கட்சியினரும் தங்கள் நம்பிக்கைகளை, கருத்துக்களை சொல்லும் விஷயங்கள் கொண்ட எழுத்துக்களுடன் சால்வை அணிந்து வந்தால் சபாநாயகர் அனுமதிக்கிறார். அவர்களை ஏற்கும் சபாநாயகர் எங்களை மட்டும் வெளியே போகச் சொல்கிறார். எங்களை மட்டும் ஆடைய மாற்றி வர வேண்டும் என உத்தரவிடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எதிர் கட்சிகளுக்கு விரோதமானது.அவர்களுக்கு ஆடையும், தொகுதி மறுவரையும் பிரச்சனை இல்லை. எதிர்க்கட்சி இல்லாமல் அவையை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியும் எதிர்க்கருத்துக்களும் மத்திய அரசுக்கு பிரச்சனை. எதிர்க்கட்சிகள் இல்லாத அவையை, வாழ்க வாழ்க என கோஷமிட்டு கொண்டு இருந்தால் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் கருத்துக்களுக்கு எதிரான கருத்துகளையும் நம்முடைய கொள்கை சார்ந்த விஷயத்தை முன் வைத்தால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.இதனால் பார்லிமென்ட் நடக்கும் நாட்கள் எண்ணிக்கை குறைகிறது. தொகுதி மறு வரையறை பிரச்னை தொடர்ந்து எழுப்புவோம். நாளை மீண்டும் ஆர்ப்பாட்டம் நடக்கும். அவையில் கருத்தை முன்வைக்க வேண்டும் என கேட்போம். இதற்கு அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறி நியாயமான தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு உறுதி கொடுக்கும் வரை போராட்டம் நடக்கும். இவ்வாறு கனிமொழி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

நரேந்திர பாரதி
மார் 21, 2025 15:20

இன்னும் என்ன என்ன வேஷம் கட்டணுமோ? பாத்தாலே சர்வர் ரேஞ்சுக்கு ஆக்கிட்டானுங்க சரி...சரி...நம்ம ஆர்டரை கவனிப்போம்.... ராசாவுக்கு ஒரு ஊத்தப்பம் .......


venugopal s
மார் 21, 2025 11:07

தமிழக எம் பி க்கள் பாராளுமன்றத்தில் உண்மையைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசினால் மத்திய பாஜக அரசுக்கு பிடிக்காது.


MARUTHU PANDIAR
மார் 21, 2025 14:03

டாஸ்மாக்கு ஊழல் மறைக்கப் படணும் ,நிறைவேறாத வாக்குறுதிகள் மக்களால் மறக்கப் படணும், 100 நாள் வேலை வாய்ப்பில் அடிக்கும் துட்டைப் பற்றி பேசக்கூடாது, மாநகர அழகுபடுத்தும் பணிக்கு மீண்டும் மீண்டும் 50,70 கோடி ஒதுக்கி அதுல கணிசமான தொகையை சைலண்டாக தடயமில்லாமல் அமுக்குவது இப்படி எல்லா உண்மையையும் பேசினாலும் அடிப்பொடி சம்பத்துக்கு பிரச்னை தான் இல்ல ?


orange தமிழன்
மார் 21, 2025 06:35

ஏதாவது டென்னிஸ் போட்டியா????


Mr Krish Tamilnadu
மார் 20, 2025 21:08

பெட்ரோல் விலை, நீட் தேர்வு என எம்.பி. தேர்தலில் ஜெயிக்க பயன்படுத்திய விசயங்கள் மறந்து விட்டனா? போலும். அண்ணாமலை அவர்கள் இங்கு குடைச்சல் கொடுப்பதால், நாங்களும் ஒரு அவையில் எதிர்கட்சி தான் என்பதற்காக அங்கு குடைச்சல். ப்ளாக்மெயில் ப்ளஸ் ப்ளாக்மெயில் இகொல் ஜீரோ.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 20, 2025 20:51

ஏனுங்க ரெண்டு சந்தேகம் . இந்த பனியனுக்கு காசு யாரு கொடுத்தாங்க , அப்பாரு வூட்டுலேந்து வந்துச்சுங்களா ? அப்புறம், இதுல என்னமோ இங்கிலீபீசுல எழுதி இருக்காங்களே, அதை தமிழ்ல எழுத முடியாதுங்களா


இராம தாசன்
மார் 20, 2025 20:15

எதிர் கட்சிகளை விடுங்கள்.. கருப்பு சட்டை போட்டு கொண்டு தேர்வு எழுத அனுமதி இல்லை


Dharmavaan
மார் 20, 2025 20:04

இங்கு சட்ட சபையில் பிஜேபி அது போல் சாராய ஊழல் பற்றி சட்டை போட்டு வந்தால் எப்படியிருக்கும் .அப்போது எதிர்கட்சிக்கு வேற நியாயமா


Kjp
மார் 20, 2025 20:02

இதை போட்டுப் போன உடனே வெளிநடப்பு.நாற்பது பேரும் வெளிநடப்பு கத்தல் ஆர்ப்பாட்டம் இதை தவிர பாராளுமன்றத்தில் என்ன சாதித்து இருக்கிறீர்கள்.


R.MURALIKRISHNAN
மார் 20, 2025 20:00

நீங்க பேசறதையெல்லாம் தமிழக மக்கள் கேட்க வேணும் என்பது விதி. மொதல்ல டாஸ்மாக்க மூட போராட்டம் நடத்துங்க. தமிழகத்தை முன்னேற்றுவோம் ன்னு வாசகத்தை எழுதுங்க!...


sri@datamail.in
மார் 20, 2025 19:55

தமிழகத்திற்கான சாமோசா எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற கவலைத்தானே ஒழிய வேறொன்றுமில்லை. எல்லாம் ஓசி சமோசா படுத்தும்பாடு