மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
புதுடில்லி : மத்திய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற தினேஷ் திரிவேதி, முதன் முறையாக நேற்று லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, பலதரப்பு உறுப்பினர்களின் கேள்விக்கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வரானதை தொடர்ந்து, ரயில்வே அமைச்சராக திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி, பதவியேற்றார். இந்நிலையில், பார்லிமென்டின் மழைக்காலத் தொடரில், முதன் முறையாக உறுப்பினர்களின் கேள்விக்கு தினேஷ் திரிவேதி பதில் அளித்தார்.
அமைச்சரான பின் அவர் சந்திக்கும் முதல் கூட்டத் தொடர் என்பதால், எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு நிலையில் இருந்து உறுப்பினர்கள், ரயில் விபத்துகள் அடிக்கடி நடப்பது பற்றி கேள்வி எழுப்பினர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விலாஸ் முட்டம்வார், ' பல ரயில் விபத்துகள் நடக்கின்றன. இதை தடுக்க ரயில்வே அமைச்சகம் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது' என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியதாவது: இது மிகவும் முக்கியமான விஷயம். இதில் எவ்வித முரண்பாடும் இல்லை. நாங்கள் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறோம். ரயில்வேயில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை உள்ள அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 1960ம் ஆண்டுகளில் ரயில்வே விபத்துகளின் எண்ணிக்கை இரண்டாயிரமாக இருந்தது. நடப்பாண்டில் 93 ஆக குறைந்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான ரயில்வே உயர் மட்ட பதவிகளுக்கான இடங்கள் விரைவில் நிரப்பப்படும். குறிப்பாக உயர்மட்டத்தில் உள்ள காலியிடங்கள் ஒரு வாரத்திற்குள் நிரப்பப்படும். பாதுகாப்பை பொறுத்தமட்டில், இதுவரையில் ஒன்றரை லட்சம் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. கோர்ட்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், காலியான இடங்களை நிரப்புவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் காலி இடங்களை பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தடையின்றி தொடரும். இவ்வாறு தினேஷ் திரிவேதி கூறினார்.
அமைச்சர்களின் பதிலில் திருப்தியடையாத சில உறுப்பினர்கள், தங்களது வருத்தத்தை தெரிவிக்கும்விதமாக கூச்சல் போட்டனர். அப்போது சபாநாயகர் மீரா குமார் குறுக்கிட்டு,' ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற பின் அவர் அளிக்கும் முதல் பதிலுரை என்பதால், அமைதி காக்க வேண்டும்' என, கேட்டுக்கொண்டார், இருப்பினும், குழப்பம் நீடித்ததால், 'என்னால் பதிலளிக்க முடியவில்லை. நான் அளிக்கும் பதில் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என, தினேஷ் திரிவேதி கூறினார்.
ஆளுங்கட்சியில் துவங்கி எதிர்க்கட்சிகளில் அனைத்து தரப்பில் இருந்தும் ரயில் விபத்துகள் குறித்து கேள்விக்கணைகள் சரமாரியாக தொடுக்கப்பட்டன. அவற்றிற்கு பதிலளிக்க தினேஷ் திரிவேதி தட்டுத் தடுமாறினார். ரயில்வே துறையில் பின்பற்றப்படும் பழைய சிக்னல்கள் முறைகளை மாற்ற, உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளித்தால், இந்திய ரயில்வேயை உலகிலேயே பாதுகாப்புமிக்கதாக மாற்றிக் காட்டுவதாக பதிலளித்தார். மேலும் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்தவராய்,' கேள்விகளுக்குதான் பதில் அளிக்க முடியும். அரசியல் பேச்சுகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது' என்று கூறினார்.
1 hour(s) ago
3 hour(s) ago | 7