உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு

அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ''தேசிய கல்வி கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,'' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.தேசிய கல்வி கொள்கை வாயிலாக தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக, ஆளும் தி.மு.க., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது: தேசிய கல்வி கொள்கையில் எந்த இடத்திலும், ஹிந்தியை மட்டும் படிக்க வேண்டும் என்று கூறவில்லை. தாய்மொழியில் கல்வி கற்பதையே தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் தமிழில் பாடம் நடத்தப்பட வேண்டும்; அதனுடன் வேறு ஒரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.ஹிந்தி, தமிழ், ஒடியா, பஞ்சாபி என, அனைத்து மொழிகளின் வளர்ச்சியை கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது. அதன்படி, அனைத்து மொழிகளும் சமமாக பார்க்கப்படுகின்றன. ஹிந்தியை திணிக்கவில்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக மட்டுமே தமிழகத்தில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

பல்லவி
மார் 04, 2025 10:44

வடக்கு மண்டல பகுதிகளில் உபதேசம் பண்ணுங்க சாமி நாங்க நல்லா இருக்கோம் கெடுக்க வேண்டாம்


pmsamy
மார் 03, 2025 14:47

பாஜக இந்தியாவின் பேரழிவுக்கு வழிவகுக்கும்


vivek
மார் 03, 2025 15:46

திமுக தமிழ்நாட்டின் பேரழிவுக்கு வழிவகுத்து விட்டது....போவியா பீலா சாமி


Madras Madra
மார் 03, 2025 14:27

வடக்கு என்றால் எங்களுக்கு வெறுப்பு அப்டித்தான் திராவிடம் எங்களுக்கு சொல்லி கொடுத்து கெடுத்து வச்சிருக்கு நீங்க மொதல்ல திராவிடத்தை ஜெய்ச்சிட்டு இதெல்லாம் எங்களுக்கு சொல்லுங்க அப்ப தமிழ் வேண்டாம் போ என்று கூட சொல்லும் எங்க கூட்டம்


பகலவன்
மார் 03, 2025 13:45

Hindi வேணாம் போ


ES
மார் 03, 2025 13:05

We are happy with our 2 language policy. One of the top developed states in the country without hindi so dont lecture us on what to learn sir


vivek
மார் 03, 2025 13:12

Mr ES...TN people want 3 languages... if you don't need get out of CBSE schools... don't make stupid drama for rs 200


rameshkumar natarajan
மார் 03, 2025 12:11

Tamil Nadu is following two language policy that is Tamil and English. If we compare tmail nadu with any other state, tamil nadu is the topper. So, what to conclude. Tamil nadu two langauge policy is sucessful and hence this two langauge policy should be implemented through the country. by the way, what is the third langauage learnt by other states?


Svs Yaadum oore
மார் 03, 2025 12:44

தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையில் உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர வேண்டும், உருது பாடப்புத்தகங்களை கொண்டு வர வேண்டும் என்று அறிவிப்பு. ஹிந்தி திணிப்பு என்று கூறும் திமுக அரசு, உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர நினைப்பது ஏன்? இது உருது திணிப்பு இல்லையா? என தமிழக பா.ஜ., தலைவர் கேள்வி .. அரசு உதவி பெறும் பள்ளி என்று உருது பள்ளியை விடியல் அரசு நடத்துது ...அந்த பள்ளி ஆசிரியர் சம்பளம் அரசு கொடுக்குது ..அது யார் வரிப்பணம் ??....


chennai sivakumar
மார் 03, 2025 12:58

Yes sir. I truly endorse your views. Can the central government has implement 2 language formula in all states??


Apposthalan samlin
மார் 03, 2025 10:42

ஹிந்தி வேண்டாம் போ


vivek
மார் 03, 2025 13:14

CBSE ஸ்கூல் முன்னாடி போய் உன் ஒப்பாரியை நடத்து


Madras Madra
மார் 03, 2025 14:23

ஆங்கிலம் வேண்டாம் பேர மாத்து


Kayal Karpagavalli
மார் 03, 2025 10:06

1.Tried learning Hindi, but was stressful..... Speaking Hindi is easy..... 2.Spanish has same English letters..... 3.Tamil should be taught internationally...for their benefit......the treasure in ancient literature will benefit the world......


rasaa
மார் 03, 2025 09:18

வெறும் அரசியல் விளையாட்டு. மிக முக்கிய காரணம், பாலியல் குற்றம், யார் அந்த சார், கொலை, கொள்ளை இவைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த மாடல் அரசு செய்யும் திட்டமிட்ட சதி வேலை. பாமர மக்களுக்கு தெரியாவிட்டால் பரவாயில்லை. படித்த மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


Pathmanaban
மார் 03, 2025 09:01

தாய் மொழியுடன் வேறு ஒரு இந்திய மொழி படிக்க வேண்டும் என்றால் அது எந்த மொழி அதை ஏன் விளக்கவில்லை மூடி மறைக்க என்ன அவசியம் அப்போ ஹிந்தி பிற்காலத்தில் திணிப்பீர்கள்


புதிய வீடியோ