உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க இண்டி கூட்டணி முடிவு

வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க இண்டி கூட்டணி முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபாவில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்று சேர்ந்து எதிர்ப்பது என ' இண்டி' கூட்டணி கட்சிகள் முடிவு செய்து உள்ளன.திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை ஏப்ரல் 2ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை விவாதித்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகள், தங்களது எம்.பி.,க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது.இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டணியான ' இண்டி' கூட்டணி தலைவர்கள் டில்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றாக எதிர்ப்பது என அனைவரும் முடிவு செய்தனர். இந்த மசோதாவிற்கு எதிராக மத்திய அரசு பிரிவினை திட்டத்தை எடுத்து உள்ளது. இதனை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பணியாற்றும் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார்.சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், இம்மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்று விவாதிக்கும். ஆனால், எதிராக ஓட்டளிப்போம் எனக்கூறினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் கூறுகையில், விவாதத்தின் போது இம்மசோதாவை கடுமையாக எதிர்ப்போம் என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Karthik
ஏப் 02, 2025 10:14

காந்தி சொன்னது போல்.. இத்தாலி அரசியல் கட்சியும், கூட்டணியும் கலைக்கப்பட/ஒழிக்கப்பட வேண்டும். இவை இந்நாட்டின் சாபக்கேடு..


பேசும் தமிழன்
ஏப் 02, 2025 08:12

நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆட்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது.. இந்த போட்டோவை பார்த்தாலே தெரிகிறது.. இவர்களை நாட்டு மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும்.


பேசும் தமிழன்
ஏப் 02, 2025 08:09

இண்டி கூட்டணி என்பதே நாட்டுக்கு எதிரான நொண்டி கூட்டணி தான்..... இவர்கள் எல்லாம் நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்.


Palanisamy T
ஏப் 02, 2025 04:11

1. BJP நாடாளுமன்றத்தில் எதைக் கொண்டு வந்தாலும் காங்கிரஸ் தலைமையில் கடுமையாக எதிர்ப்போம் என்ற வேண்டாத வெறுப்பு அரசியல் கொள்கையின் அடிப்படையிலா அல்லது நல்ல அரசியல் கொள்கையின் அடிப்படையிலா? இதுநாள்வரை மத்தியில் நீண்டகால காங்கிரஸ் ஆட்சியில் தமிழர்கள் கொஞ்சமும் பாதிக்கப் பட்டதேயில்லையா? தமிழகம் காவேரி ஆற்றின் உரிமையிழந்தது, கச்ச தீவு பறிபோனது, இதன் விளைவால் அன்று பல மீனவர்களின் உயிர்கள் கடலில் பறி போனது, இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் தமிழர்கள் கொஞ்சமும் பாதுகாப்பில்லாமல் தேவையில்லாமல் கொல்லப்பட்டதெல்லாம் எதனால்? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் இதெல்லாம் நடந்தது. ஏன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? மசோதாசவை வேண்டா மென்று சொல்கின்றீர்களா அல்லது இன்னும் மாற்றங்கள் செய்யவேண்டு மென்றுச் சொல்கின்றீர்களா? புரியவில்லை


Kasimani Baskaran
ஏப் 02, 2025 03:57

பாராளுமன்றத்தில் பலமில்லாத இதுகளால் ஒன்றும் செய்ய முடியாது.


SUBBU,MADURAI
ஏப் 02, 2025 03:50

Waqf Amendment Bill BJP led NDA have Clear Majority in Both Lok Sabha and Rajya Sabha. Loksabha NDA: 293/543 Rajya Sabha NDA: 125/ 245 BJP led NDA doesnt need Party like BJD and YSR. NDA has ENOUGH numbers to PASS Waqf Amendment Bill.


Visu
ஏப் 01, 2025 23:46

புள்ளி கூட்டணியை மிககடுமையாக எதிர்க்க இந்தியர்கள் முடிவு


vadivelu
ஏப் 01, 2025 23:39

அவர்களாக பார்த்து கொடுப்பதை வாங்கி கொள்ள தயார் என்று எதிர்ப்பவர்கள் உறுதி மொழி கொடுப்பார்களா?


rajakumar
ஏப் 01, 2025 23:06

இந்த மசோதாவை சில இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் இன்டி கூட்டணி எதிர்க்கிறது. அப்போ இந்துக்களுடைய சொத்தை வக்பு என்ற போர்வையில் எடுத்துக் கொள்கிறார்கள். அப்போ இந்துக்கள் அவர்களுடைய சொத்தை இழுக்கட்டும் என்று இன்டி கூட்டணி நினைக்கிறது என்று நினைக்கிறேன்.


subramanian
ஏப் 01, 2025 23:02

யாரும் உதவ மாட்டார்கள்


சமீபத்திய செய்தி