உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடுக்கிக்கு ஆரஞ்ச் அலர்ட் நீர் நிலை சுற்றுலா நிறுத்தம்

இடுக்கிக்கு ஆரஞ்ச் அலர்ட் நீர் நிலை சுற்றுலா நிறுத்தம்

மூணாறு:கேரளாவில் பருவ மழை முடிவுக்கு வரும் தருவாயில் நேற்று இடுக்கி உட்பட நான்கு மாவட்டங்களுக்கு கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. கேரளாவில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்தாண்டு வழக்கத்தை விட முன் கூட்டியே மே 24ல் துவங்கியது. பருவ மழை முடிவுக்கு வரும் தருவாயில் நேற்று பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனிடையே இடுக்கி, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களுக்கு கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. நாளை(செப்.28) வரை பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொது மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுத்தது. நிறுத்தம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாட்டுபட்டி, குண்டளை உட்பட அணைகளில் படகு சவாரி உட்பட நீர்நிலை சுற்றுலா நிறுத்தப் பட்டன. அதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நெடுங்கண்டம் அருகே எழுகும்வயல் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு ஏக்கர் விளை நிலம் சேதமடைந்தது. மூணாறு அருகே வெள்ளத்துாவலில் போலீஸ் ஸ்டேஷனில் சுற்றுச்சுவர் இடிந்து கட்டடம் ஆபத்தாக உள்ளது. அடிமாலி அருகில் உள்ள கல்லார்குட்டி அணை நிரம்பியதால், நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ