உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்குரு பேசுவது போல அச்சு அசல் வீடியோ: பெண்ணிடம் ரூ.3.75 கோடி சைபர் மோசடி

சத்குரு பேசுவது போல அச்சு அசல் வீடியோ: பெண்ணிடம் ரூ.3.75 கோடி சைபர் மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ஆன்மிகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுவது போல, அச்சு அசல் 'வீடியோ' வெளியிட்டு, 57 வயது பெண்ணிடம், 3.75 கோடி ரூபாயை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். முதலீடு கர்நாடக மாநிலம், பெங்களூரு, சி.வி.ராமன் நகரை சேர்ந்த, 57 வயது பெண், கடந்த பிப்ரவரி 25ம் தேதி, முகநுாலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, கோவை ஈஷா நிறுவனர் சத்குரு, 'ஆன்லைன் டிரேடிங்' எனப்படும், இணையதளம் வாயிலாக செய்யப்படும் வர்த்தகம் குறித்து பேசுவது போல வந்த வீடியோவை பார்த்தார். வீடியோவில் குறிப்பிடப்பட்ட, 'வாட்ஸாப்' எண்ணை தொடர்பு கொண்டு, வங்கி எண் உட்பட அனைத்து விபரங்களையும் கொடுத்தார். இதையடுத்து, அந்த பெண்ணை வலீத் என்பவர் தொடர்பு கொண்டு, 'ஆன்லைன் டிரேடிங்' குறித்து விளக்கினார். வலீத் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்த அப்பெண், பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். 'ஸ்விட்ச் ஆப்' அந்த செயலியில், அவர் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியதாக காண்பித்தது. இதை நம்பியவர் ஏப்ரல் 23ம் தேதி வரை, 3.75 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். இந்த தொகையை சில நாட்களுக்கு முன், அவர் எடுக்க முயற்சித்தபோது, எடுக்க முடியவில்லை. இதுகுறித்து, வலீத்திடம் கேட்டார். அதன்பின், அவரது மொபைல் போன், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், சைபர் போலீசாரிடம் புகா ர் தெரிவித்தார். போலீசார் கூறுகையில், 'சைபர் மோசடி நடந்து, பல மாதங்களுக்கு பின், அப்பெண் புகார் அளித்துள்ளார். பணத்தை மீட்பது சவாலான விஷயம். இருப்பினும், பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 'சத்குரு பேசுவது போல் அச்சு அசல் தொழில்நுட்பத்தில் போலியான வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதை பார்த்து, உண்மையிலேயே அவர் பேசுவதாக அப்பெண் நினைத்து, முதலீடு செய்துள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Saai Sundharamurthy AVK
செப் 12, 2025 12:44

ஒருவேளை திராவிட கட்சிகளே இப்படியொரு வீடியோ போட்டு கொள்ளையடிக்கிறார்களோ !!!


pmsamy
செப் 12, 2025 07:08

கடவுள் யாருக்கும் நேரடியாக உதவ மாட்டார் அதற்காகத்தான் மனிதர்களுக்கு மூளையை கொடுத்துள்ளார் பக்தி மூளையை உபயோக ப்படுத்த விடவில்லை என்றால் அவர்களுக்கு அழிவு நிச்சயம்.


suresh Sridharan
செப் 12, 2025 06:54

அப்படியே அவர் சம்பாதிப்பதாக இருந்தால் கோவை 2000 ஏக்கருக்கு மேல் உள்ள காருண்யா நகரை போல் ஈஷா இன்னும் விரிந்திருக்கும் யாரையும் சொல்லிக் குற்றமில்லை AI VIDEO சரியான முறையில் ஆய்வு செய்து எதுவும் செய்யவும் பணத்தின் மீது உள்ள ஆசை மக்களுக்கு இன்னும் தீரவில்லை கோடி கோடியாக இருந்தாலும் தீராத மோகம்


Natarajan Ramanathan
செப் 12, 2025 04:28

இது கண்டிப்பாக மிஷனரிகளின் வேலையாகத்தான் இருக்கும். அவர்கள்தான் சத்குருவை எப்படியாவது ஒழிக்கப்பார்க்கிறார்கள்.


Ganesh S
செப் 12, 2025 01:54

இது போல நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் பேசும் போலி வீடியோக்களும் வர்த்தக வலை தளங்களில் உலா வருகின்றன.நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 12, 2025 01:41

இந்த ஆளே பேசி காசை ஏப்பம் விட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதான் ரொம்ப சாத்தியம். இப்போ ஏஐ ன்னு சொல்லி தப்பிக்க பாக்குறானுங்க.


மு செந்தமிழன்
செப் 12, 2025 07:16

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒன்னும்... இல்லை. ஊரை ஏமாற்றி உலயில் போட


Natarajan Ramanathan
செப் 12, 2025 08:32

அப்படியே ...உளறுவதுபோல பல AI வீடியோக்கள் வருகிறதே... அதுவும் அவர் பேசியதுதானோ?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 12, 2025 01:38

நல்லா தேடிப் பாருங்க சைபர் கிரைம் போலீஸ்கார். எனக்கு இந்த சத்துருவே போலி ஆப் பரப்பி விட்டு அதுவழியாக கூட ஆட்டையை போடுவார்ன்னு தோணுது. ஏதோ, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சின்னு அம்மிணி சந்தோசப்படலாம் அம்மிணி நேரடியாக ஜக்கியிடம் மாட்டியிருந்தா மொத்த சொத்தையும் இழந்திருப்பார் என்பது நிச்சயம் உதாரணத்துக்கு, அமெரிக்காவில் இந்த சத்துரு ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்தை வித்துக்கிட்டு இருக்காப்புலே. அதிலெ 3 லட்சம்லெ இருந்து 5 லட்சம் அமெரிக்க டாலர் கிட்டத்தட்ட 3-5 கோடி இவருக்கு கொடுத்து ஒரு 2-3 பெட்ரூம் அபார்டமென்ட்/வீடு வாங்கலாமாம். உங்க காலம் முடிந்த பிறகு சொத்தை உங்க புள்ளைங்க வாரிசுங்களுக்கு போகாது. அது இந்த சத்துருக்கு சொந்தமாயிடும். எப்படி இருக்கு மோசடி. பணத்தாசை பிடிச்ச பிராடு அயோக்கியன் கூட இப்படி செய்யமாட்டான், இந்த சத்துரு செய்வாப்புலே. அடுத்தவங்க சொத்துன்னா அம்புட்டு வெறி மாப்புள்ளைக்கு . அதனால் தான் சொன்னேன், அந்த பெண்மணி தப்பிச்சாருன்னு


SANKAR
செப் 12, 2025 01:24

such videos are dime a dozen in FB.In my own FB 8 have seen such videos featuring Narayanamoorthy to Nirmala Seetaraman. if you see one immediately report to Cybercrime portal.Never pay a single paisa.