உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் அனுப்பிய 600 ட்ரோன்கள் வீழ்த்திய இந்தியா: வெளியான புதுத் தகவல்

பாகிஸ்தான் அனுப்பிய 600 ட்ரோன்கள் வீழ்த்திய இந்தியா: வெளியான புதுத் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய 600க்கும் மேற்பட்ட டுரோன்களை இந்திய ராணுவம் அழித்து உள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமோ, இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ட்ரோன்களை அனுப்பி தாக்க முயன்றது. ஆனால், நமது ராணுவத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.இந்நிலையில், பாகிஸ்தான் அனுப்பிய 600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணுவம் அழித்தது தெரியவந்துள்ளது. ட்ரோன்கள் ஊடுருவ துவங்கியதுமே, இந்திய பாதுகாப்புப் படையினர் ,வான் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தியதுடன், சர்வதேச எல்லை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தானின் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன.இத்துடன் பாதுகாப்புக்கு கூடுதல் சேர்க்கும் வகையில், குறுகிய தூரத்தில், தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளும் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. இத்துடன், ஆகாஷ் டிர் அமைப்பும் பாதுகாப்பு பணியில் இருந்தது. இத்துடன் சுவீடனில் தயாரிக்கப்பட்ட எல் 20 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜூயு -23 எம்எம் துப்பாக்கிகள், ஷில்கா துப்பாக்கி அமைப்பும் பாகிஸ்தான் டுரோன்களை வீழ்த்த பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

lana
மே 18, 2025 09:17

இந்தியா வை காத்த அனைத்து வீரர்களுக்கும் அறிவியல் அறிஞர்கள் க்கும் அதனை ஒருங்கிணைந்த செயல் படுத்திய பாரத பிரதமர் அவர்கள் க்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்


Kasimani Baskaran
மே 17, 2025 22:32

விமானதளங்கள், அணுவாயுதக்கிடங்கு போன்றவற்றை ஏன் இந்தியா தாக்கியது என்பது இப்பொழுதுதான் புரிகிறது. இத்தணை டிரோன்களும் பொது மக்கள் கூடியிருக்கும் இடங்களில் விழுந்து இருந்தால் சேதம் ஈடுகட்ட முடியாததாக இருந்திருக்கும். மோடி என்ற மகாமனிதனின் கடும் உழைப்பு பலரது நிபுணத்துவத்தை ஒருமுகப்படுத்தி இந்தியாவை ஒரு கீறல் கூட விழாமல் காத்திருக்கிறது. ஈடு இணையில்லா இராணுவம், அதன் தியாகம், டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பு, செயற்கைக்கோள்களை உருவாக்கி விண்ணில் நிறுத்திய ஐஎஸ்ஆர்ஓ, உளவுத்துறை, இஸ்ரேலிய விஞ்ஞானிகள், ரஷ்ய விஞ்ஞானிகள் ஆகியோரில் உழைப்பு இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.


Ramesh Sargam
மே 17, 2025 20:15

நம் நாட்டு தேச துரோகிகளுக்கு இது ஒரு பெரிய துக்ககரமான செய்தி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை