உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்மநாப சுவாமி கோவில் தங்க டாலர் விற்பனையில் முறைகேடு

பத்மநாப சுவாமி கோவில் தங்க டாலர் விற்பனையில் முறைகேடு

திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவிலில், தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தணிக்கை அதிகாரிகள் கண்டறிந்துள்ள நிலையில், நடவடிக்கை எடுக்கப்படாததால், முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த, கோவில் ஊழியர்கள் (கர்மசாரி சங்கம்) கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. கோவில் நிர்வாகத்தை, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். இக்கோவிலில், தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, கோவில் தணிக்கைத் துறை கண்டறிந்து, கோவில் நிர்வாகத்திடம் அறிக்கையை அளித்துள்ளது. ஆனால், கோவில் நிர்வாகம், இவ்விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என, கோவில் ஊழியர்கள் (கர்மசாரி)சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே, இக்கோவிலில் இருந்து பாயச பிரசாதத்தை எடுத்துச் செல்வதுபோல், கோவில் பொக்கிஷங்களை உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கடத்திச் சென்றுள்ளார் என, கேரள மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் குற்றம் சாட்டி உள்ளார். இந்நிலையில், தங்க டாலர் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளது என்ற தணிக்கை அறிக்கை, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை