உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகள் பல்டி: உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு

பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகள் பல்டி: உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு:பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைதான இருவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்., 22 அன்று சுற்றுலா பயணியரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wpi3myut&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருவர் கைது தாக்குதல் நடந்த ஐந்து நாட்களுக்குப் பின் வழக்கு விசாரணையை கையில் எடுத்த என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, கடந்த ஜூன் 26 அன்று, பஷீர் அஹமது மற்றும் பர்வேஸ் அஹமது என இருவரை கைது செய்தது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கைதான இருவரும் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மேற்கொண்டு அவர்களிடம் இருந்து தகவல்களை பெற, உண்மை கண்டறியும் சோதனை நடத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றவாளிகள் இருவரும், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளை அதிகாரிகள் ஆஜர்படுத்திய நிலையில், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என இருவரும் பகிரங்கமாக கூறினர். வாக்குமூலங்கள் சட்டத்தின்படி, உண்மை கண்டறியும் சோதனைக்கு குற்றவாளிகள் சம்மதம் தெரிவிக்காவிட்டால், அவர்களுக்கு அந்த சோதனையை நடத்த முடியாது எனக் கூறி, என்.ஐ.ஏ.,வின் கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய சிறப்பு நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வகுத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உண்மை கண்டறியும் சோதனை நடத்த குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் அவசியம். தவிர, அறிவியல் பூர்வமான இந்த சோதனையின் போது குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் அவர்களது வழக்கறிஞர்கள் முன்பாகவே பதிவு செய்யப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

சிந்தனை
செப் 12, 2025 16:42

தீர்ப்பு கொடுப்பவர்களின் உண்மை தன்மையையும் ஆராய்ச்சி செய்வது சிறப்பு நாட்டுக்கு நல்லது


Barakat Ali
செப் 12, 2025 13:04

கவனிக்கும் கவனிப்பில் உண்மை தானா வெளியே வரணும்.. ஆனால் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு என்று செய்தி வெளியிடுவது பாகிஸ்தானின் எதிர்வினையைக் கவனிக்கத்தான்..


venugopal s
செப் 12, 2025 11:38

நான் கூட என் ஐ ஏ ஏதோ ஸ்பெஷல் போலீஸ், வித்தியாசமாக ஏதாவது செய்வார்கள் என்று நினைத்தேன், அவர்களும் நம்மூர் லோக்கல் போலீஸ் போல தான் செயல்படுகின்றனர்!


VenuKopaal, S
செப் 13, 2025 07:33

kopaal க்கு கோவம். நம்மூர் போலி is நள்ளிரவில் ஆந்திரா சென்று நடிகை கைது செய்யும். சிலிண்டர் வெடித்து சிதறியது என கூறும். அதைப் போல nia இருக்க வேண்டும் என நினைகிறார்...ஹும் எல்லாம் இரு நூறு படுத்தும் பாடு...


Rathna
செப் 12, 2025 11:14

நேர்மையானவனை விட அயோக்கியங்களுக்கு சட்ட பாதுகாப்பு அதிகம். இது தான் நடைமுறை என்பது மிகவும் கேவலம்.


ajay nation first
செப் 12, 2025 10:47

இந்திய நீதி துறையில் இருக்கும் சில பல ஓட்டையில் காரணமாகத் தான் இன்னும் பல குற்றவாளிகள், ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள் தண்டனையில் இருந்து தப்பித்து கொண்டு இருக்கிறார்கள். இதை நமது இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு சரி செய்ய வேண்டும். இல்லையேல் குற்றவாளிகள் தப்பித்து மிக சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள்


N.Purushothaman
செப் 12, 2025 09:46

அப்போ இவனுங்களுக்கு மிக மிக தெளிவா தெரிஞ்சி இருக்கு ...விசாரணையில் ஓத்துக்கிட்டு நீதிமன்றத்தில் பல்டி அடிப்பதில் இருந்தே தெரிகிறது நிச்சயம் இவனுங்களுக்கு தீவிரவாதிகளோட தொடர்பு இருக்கும் என்பது புலனாகிறது.. என் சவுண்ட்டரில் போட்டு தள்ளிட்டு போயிகிட்டே இருக்கணும் ...தேவையில்லாம பிரியாணி செலவு வேற ..


duruvasar
செப் 12, 2025 08:57

அந்த இருவரையும் ஸ்டாலின் அரசுக்கு எதிராக ட்விட்டரில் ஒரே ஒரு சிறிய பதிவை போட சொல்லுங்கள். அப்பறம் பாருங்க தென்கிழக்கு ஆசியாவின் ஸ்காட்லாந் யார்டின் கரகாட்டத்தை. இதுதான் ஈசியஸ்ட் வே


Sudha
செப் 12, 2025 08:20

ஒரு சூப்பர் ஐடியா, ஒரு டாஸ்மாக் கடையில் 10 நாள் வைத்தால் எல்லா உண்மைகளும் கிடைக்கும். இனி டாஸ்மாக் கை மூட யாரும் போராட மாட்டார்கள்.


Sudha
செப் 12, 2025 08:18

எனவே அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கலாம்


KOVAIKARAN
செப் 12, 2025 07:40

ஏன் விசாரணை? அவர்கள் தீவிரவாதிகளுக்கு உதவினார்கள் என்று NIA க்கு உறுதியாக தெரிந்தால், encounter ல் போட்டுத்தள்ள வேண்டியதுதானே. ஏன் நீதிமன்றத்தை நாடவேண்டும். நீதிமன்றம் மனித உரிமை நிபந்தனைகளை மேற்கோடு காட்டி நிகாரித்தது சரி அல்ல. இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் தேவை இல்லை என்று நீதி மன்றம் தீர்ப்பு கூறி இருக்கவேண்டும். இது என்னைப்போன்ற நாட்டுப் பற்றுள்ளவர்களின் கருத்து.


Raman
செப் 12, 2025 07:56

Absolutely


முக்கிய வீடியோ