உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்!

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ஏவுகணையை, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏவியதும், அதை நமது வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 மூலம் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதும், இப்போது தெரியவந்துள்ளது.ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=60d5kngp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, இந்தியாவுக்கு எதிராக என்னென்ன ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது என்ற விவரங்கள், வெளியாகி வருகின்றன. அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் என்ற ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியதை இந்திய இராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த ஷாஹீன் ஏவுகணையை, தரையிலிருந்து ஏவ முடியும். இது மார்ச் மாதம் 2015ல் முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை, பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ஏவியுள்ளது. ஆனாலும் இந்திய பாதுகாப்பு படையினர், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 400 சுதர்சன சக்கரம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் அதை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர். இதன் மூலம், பாகிஸ்தான் பெரிதாக நம்பியிருக்கும் ஷாஹீன் ஏவுகணை, இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் எளிதில் சுட்டு வீழ்த்தப்படக் கூடியது என்ற உண்மை அம்பலம் ஆகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

M Ramachandran
மே 20, 2025 00:32

மறையமுக மான நம் எதிரிகோழை சப்பை மூக்கு காரன் தான் அவன் திமிறை அடக்கினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும்.


Jayaraman Santhi
மே 20, 2025 12:19

ஆமாம் அண்ணா... அந்த குருவி மூக்கு காரன் தான் அந்த பாகிஸ்தான் எலி மூக்கு காரண தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறான். அது அந்த கொட போல்ட் பயலுங்களுக்கு தெரிஞ்சும் நம்ம கிட்ட மோதி வீணா அடிபட்டு சாகுறானுங்க. இந்த காலம் இல்லை. எந்த காலமும் இந்த பாகிஸ்தான் நம்மகிட்ட அடி வாங்கித்தான் இருகானுங்க...இதுல அரசியலும் கலந்து இருக்கிறதுதான் வெட்கப்பட வேண்டிய விசயம்


Rathna
மே 19, 2025 20:07

இந்தியாவை பாதுகாக்க நான்கு நிலை பாதுகாப்பு கவசம் இந்தியா ராணுவத்திடம் உள்ளது. எனவே பாகிஸ்தானின் ட்ரான்கள், ஏவுகணை, விமானங்கள், இந்திய வான்வெளியில் நுழைவது கடினம். ஆனால் இந்தியாவின் ஆயுதங்கள் 1 மீட்டர் துல்லியத்தில், பாகிஸ்தானின் ராணுவ மற்றும் முக்கிய கேந்திரங்களை தாக்கும் வல்லமையை நிரூபித்துள்ளது. பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கை இந்திய விமானங்கள், அதன் வாயில் வரை சென்று தாக்கி திரும்பி வந்து உள்ளது


Diraviam s
மே 19, 2025 16:21

சரியான கருத்து.


Krishnamoorthy Caa
மே 19, 2025 14:02

அடேய் என்ன எழவு இது.. எல்லா இராணுவ அறிவு ஜீவிகளும் இதுவரை நாம் s400 அமைப்பினை பயன்படுத்த வில்லை. முற்றிலும் உள்நாட்டில் தாயாரிக்கப்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்பையே பயன்படுத்தி உள்ளோம் என்று திருப்ப திருப்ப சொல்கிறார்கள். ஆனாலும் நீங்கள் ஸ்400 தான் பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறீர்கள்.


Ganapathy
மே 19, 2025 14:56

அப்படில்லாம் யாரும் சொல்லல.


Arunkumar,Ramnad
மே 19, 2025 16:22

நீ ஏன்டா இவ்வளவு தூரத்துக்கு துள்ற அடங்குடா எத்தனை பேருடா இப்படி துரோக வேலை செய்ய கிளம்பியிருக்கீங்க?


Kasimani Baskaran
மே 19, 2025 19:36

இந்தியா எத்தனை தோட்டா வைத்து அடித்தார்கள் போன்ற தகவல்களை பொது வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உதாரணத்துக்கு S400 ஐ உபயோகித்து ஏவுகணைகளை வீசி 600 டிரோன்களை அடித்திருந்தால் கதை கத்தலாகி இருக்கும். ஒரு ஏவுகணை விலை 4-5 கோடி இருக்கும். ஆகவே இந்தியா வேறு தொழில் நுணுக்கத்தை உபயோகித்து இருக்கிறது. அது லேசராக இருக்கலாம் அல்லது சிறிய வகை கையில் வைத்து இயக்கும் நவீன துப்பாக்கிகளாக கூட இருக்கலாம். இராணுவத்தினர் கடுமையாக உழைத்து இந்தியாவை காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.


vadivelu
மே 19, 2025 13:47

எத்தனயோ எப்படியோ எல்லாம் ... போனவர்கள் அப்படிதான் பேசி திரிகிறார்கள். பிழைப்புக்கு வேறென்ன செய்வார்கள். அது சரி யாரது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 19, 2025 13:29

குறுகிய காலப்போருக்கு மலைபோல நம்பியிருந்த அதுவும் தடுக்கப்பட்டதால் சரணடைந்திருக்கலாம் ......


Sivasankaran Kannan
மே 19, 2025 13:23

சுந்தரவல்லி என்ற ஒருவர் வாய்க்கு வந்ததை உளறி பிழைக்கிறது..


Varadarajan Nagarajan
மே 19, 2025 13:17

ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதைவிட எதிர்காலத்தில் அவற்றை திசைதிருப்பி மீண்டும் அனுப்பிய இடத்தையே தாக்கும் வகையில் நமது ராணுவ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படவேண்டும்.


Gunaseelan vms
மே 19, 2025 13:57

Super idea


Jayaraman Santhi
மே 20, 2025 12:22

சூப்பர் ஐடியா


Naga Subramanian
மே 19, 2025 13:09

இன்னும் ஏன் பொறுமை வேண்டிக்கிடக்கு? அடித்து துவம்சம் செய்திருக்கலாமே


subramanian
மே 19, 2025 13:07

எதிரியை என்றும் பலவீனமாக கருதக்கூடாது.


சமீபத்திய செய்தி