வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இவர்..........?
ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்
காஷ்மீரின் முதல்வர் ஜம்மு சென்று மக்களை சந்திக்கச்செல்வது மிக நன்று அங்கேயே தங்கி பதட்டம் குறையும்வரை இருந்து மக்களுடன் வாழலாம்
ராணுவ தளபதி பாத்துக்குவார்
ஸ்ரீநகர்: ஜம்முவில் பாகிஸ்தானின் ஏவுகணையால் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மக்களை முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சென்று நலம் விசாரித்தார்.பாகிஸ்தானுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, இந்தியா தக்க பாடம் புகட்டியது. இதனால் ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள் , ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது.ஜம்முவில் பாதுகாப்பு படையினர் உஷாராக இருந்த நிலையில், பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி, சதி திட்டத்தை முறியடித்துள்ளனர். அத்துமீறி பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஜம்முவிற்கு, முதல்வர் உமர் அப்துல்லா விரைந்தார்.அவர் ஜம்முவில் பாகிஸ்தான் வீசிய ஏவுகணையால் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக, ''ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் தோல்வி அடைந்துள்ளது'' என்று உமர் அப்துல்லா சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இவர்..........?
ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்
காஷ்மீரின் முதல்வர் ஜம்மு சென்று மக்களை சந்திக்கச்செல்வது மிக நன்று அங்கேயே தங்கி பதட்டம் குறையும்வரை இருந்து மக்களுடன் வாழலாம்
ராணுவ தளபதி பாத்துக்குவார்