வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவ்வளவு நடந்த பிறகு எதற்கு ராஜரீக உறவு? ஆனால் நாம் உளவு பார்க்க தேவையாக இருக்கிறதோ?
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்ததாகக் கூறி, பாகிஸ்தான் துாதரக ஊழியர் ஒருவரை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியேற்றிய நிலையில், நேற்று பாகிஸ்தான், இந்திய துாதரக ஊழியர் ஒருவரை, உளவு பார்த்ததாகக் கூறி வெளியேற்றி உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது. தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தம் அறிவித்துள்ளன. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.இந்நிலையில், டில்லியில் செயல்படும் பாகிஸ்தான் துாதரகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவரை, மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியேற்றியது. உளவு பார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையே, பாகிஸ்தான் அரசு நேற்று, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துாதரக அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய துாதரக ஊழியர் ஒருவரை, உளவு பார்த்ததாகக் கூறி வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என, அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வளவு நடந்த பிறகு எதற்கு ராஜரீக உறவு? ஆனால் நாம் உளவு பார்க்க தேவையாக இருக்கிறதோ?