உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய் பிரசாரம் செய்யும் பாகிஸ்தான்; அது உலகிற்கே தெரியும்; காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

பொய் பிரசாரம் செய்யும் பாகிஸ்தான்; அது உலகிற்கே தெரியும்; காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதலில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று (மே 12) ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா கூறியதாவது: கடந்த நான்கு நாட்களாக, ஜம்மு-காஷ்மீரில் போர் போன்ற சூழல் நிலவியது. பாகிஸ்தான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதலில் பூஞ்ச் மாவட்டம் ​​மிகவும் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலில் 13 விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின. இந்த கடினமான சூழ்நிலையிலும் சகோதரத்துவத்தைப் பேணியதற்காக பூஞ்ச் ​​மக்களுக்கு நன்றி தெரிவித்தேன்..நான் இங்குள்ள மக்களை சந்தித்து பேசினேன். அப்பகுதி மக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்கியதாக பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால் மக்களுக்கும், எனக்கும் உண்மை தெரியும். பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உலகிற்கே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கிஜன்
மே 12, 2025 20:54

சூப்பர் .... ஒரு பாராட்டப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் .... டிரோன் மழையில் .... எதிரி நாட்டு தலைகள் பதுங்கியபோது .... நீங்கள் சாலை மார்க்க்கமாக ஜம்முவிற்கு சென்றது .... மக்களை சந்தித்தது சிறப்பு ....


Palanisamy T
மே 12, 2025 18:18

நடந்துமுடிந்தப் போரில் சீனாவில் தயாரிக்கப் பட்ட ஜே 10 விமானங்கள் 2 இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக வந்த தகவல்கள் தகவல் சாதனங்களில் வந்த செய்திகள் எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரிவிப்பார்களா? உண்மையில்லை யென்றால் மகிழ்ச்சிதானே. இது இந்திய விமானப் படையின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட விஷயம்.


VSMani
மே 12, 2025 17:12

பொய் பிரசாரம் செய்யும் அந்த நாட்டு இராணுவத்தினர் நல்ல இஸ்லாமியர்கள் அல்ல. அவர்கள் 13 விலைமதிப்பற்ற இந்திய இஸ்லாமிய உயிர்களை கொன்று இருக்கிறார்களே. அணைத்து இஸ்லாமிய நாடுகளும் அந்த நாட்டுக்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது. அணைத்து இஸ்லாமிய நாடுகளும் அந்த நாட்டை விலக்கி வைக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை