உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சி: பாகிஸ்தான் எதிர்ப்பு

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சி: பாகிஸ்தான் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சிக்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி (பிப். 19-மார்ச் 9) நடக்கவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளது.துவக்க விழாவில் பங்கேற்க கேப்டன் ரோகித் சர்மாவை, பாகிஸ்தான் அனுப்ப, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்தது.தற்போது இந்திய அணியின் 'ஜெர்சி'யால் சர்ச்சை எழுந்துள்ளது. ஐ.சி.சி., நடத்தும் தொடர்களின் போது வீரர்கள் அணியும் 'ஜெர்சியில்' லோகோ, போட்டியை நடத்திடும் நாடுகளின் பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் 'ஜெர்சி'யில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் மட்டும் நடக்க இருப்பதால், பாகிஸ்தான் பெயரை சேர்க்கவில்லை என பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து பி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கிரிக்கெட்டில் பி.சி.சி.ஐ., அரசியலை புகுத்துகிறது. இது விளையாட்டுக்கு நல்லதல்ல. முதலில் பாகிஸ்தானில் விளையாட மறுத்தது. பின், துவக்க விழாவுக்கு கேப்டனை அனுப்ப முடியாது என்றது. தற்போது ஜெர்சியில் போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை சேர்க்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Elangovan A
ஜன 22, 2025 15:45

பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்று போட்டுக்கொள்ளலாம்


Ramesh Sargam
ஜன 22, 2025 12:30

இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. கூடிய சீக்கிரம் பாக்கிஸ்தான் தன்னுடைய பயங்கவாத போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்தியா வெளியிடும் உலக வரைபடத்தில் கூட பாக்கிஸ்தான் பெயர் இருக்காது.


Minimole P C
ஜன 22, 2025 08:34

why should BCCI put Pakistan name in the jersi, when India is not playing there? Last year also Srilankan team got scared because of bomb blast near the hotel where they stayed. Howcome teams will go there and play that too a country, India is shown as worst enimy country in the minds of pakistani people just to come to power.


sridhar
ஜன 22, 2025 07:10

இந்தியா பெருந்தன்மையோடு நடந்து கொள்ளலாம்.


subramanian
ஜன 22, 2025 07:51

நீங்கள் சொல்வது, நம்மிடம் பெருந்தன்மையுடன், மரியாதையுடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டும் பொருந்தும். நம் ஏர்மார்ஷல் அபிநந்தனை உட்கார கூட விடாமல் அராஜகம் செய்தவர்கள் பாகிஸ்தான் ராணுவம்.


நிக்கோல்தாம்சன்
ஜன 22, 2025 05:36

அதாவது பாகிஸ்தான் என்றொரு நாடே இல்லை என்று கூறப்படுகிறது , வழக்கமாக இந்த விளையாட்டை நான் காண்பது கூட இல்லை , ஆனால் இப்படி ஒரு செய்தியை படித்தபின் சும்மா இருக்க முடியுமா


vns
ஜன 22, 2025 07:55

ரைஸ் கன்வெர்ட்.. சும்மா இருப்பது நல்லது


சமீபத்திய செய்தி