UPDATED : மே 21, 2025 04:05 PM | ADDED : மே 21, 2025 04:03 PM
புதுடில்லி: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க அனைத்துக்கட்சிக் குழு உலக நாடுகளுக்கு பயணம் செல்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான முதல் குழு, டில்லி விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதன் தொடர்ச்சியாக, பயங்கரவாதிகளை தொடர்ந்து ஆதரித்து வரும் பாகிஸ்தானின் முகத்திரையை சர்வதேச அரங்கில் கிழித்து தொங்கவிட, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=68hb07lq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இக்குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் சுயரூபத்தை அம்பலப்படுத்துவர்.இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி., சஞ்ஜய் குமார் ஷா தலைமையிலான எம்.பி.,க்கள் குழு இன்று (மே 21) ஜப்பானுக்கு புறப்பட்டது. இக்குழுவில் பாஜ, மார்க்சிஸ்ட், திரிணமுல் கங்கிரஸ் எம்பிக்கள் 6 பேர் உள்ளனர்.ஜப்பான், இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளுக்கு இக்குழு செல்ல உள்ளது. குழுவின் தலைவர் சஞ்ஜய் குமார் ஜா எம்பி கூறியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒன்றுமையுடன் செயல்படுவோம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மட்டுமே செழித்து வளர்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்குச் சொல்வதே இந்தக் குழுவின் நோக்கம்.நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது. பாகிஸ்தான் அரசே பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. இதை உலக நாடுகளுக்கு ஆதாரத்துடன் எடுத்துரைப்போம். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நட்பு ரீதியில் போடப்பட்டது. தற்போது இரு நாடுகள் இடையே அந்த சூழல் இல்லை. இவை அனைத்தையும் நாங்கள் உலக நாடுகளிடம் எடுத்துரைப்போம் என்றார்.