உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தானின் பங்கு; ஐநாவில் விளாசிய இந்தியா!

பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தானின் பங்கு; ஐநாவில் விளாசிய இந்தியா!

நியூயார்க்: ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா சார்பில் பேசிய பாஜ எம்பி நிஷிகாந்த் துபே, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தானை விளாசினார்.அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானால் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில், 26 அப்பாவி பொதுமக்களின் உயிரிழந்த சம்பவத்தை சர்வதேச சமூகம் மறக்கவில்லை. ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய பாதுகாப்பு படையினர் துல்லிய தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதத்திற்கு எதிராக தனது மக்களைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் இந்தியா தனது உரிமையைப் பயன்படுத்தியது. பாகிஸ்தான் வேண்டுமென்றே நமது எல்லை கிராமங்களை குறிவைத்தது. இதன் விளைவாக குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஐநா சபை மேடையில் பிரசங்கிப்பதை நிறுத்த வேண்டும். அதன் எல்லைக்குள் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்க செயல்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டனர். இவ்வாறு பாஜ எம்.பி. நிஷிகாந்த் துபே பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ