உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கின்னஸ் சாதனை படைத்தது பரிக்சா பே சர்ச்சா 2025 நிகழ்வு; 3.53 கோடி பேர் பதிவு

கின்னஸ் சாதனை படைத்தது பரிக்சா பே சர்ச்சா 2025 நிகழ்வு; 3.53 கோடி பேர் பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; பரிக்சா பே சர்ச்சா நிகழ்வில் பங்கேற்க இதுவரை 3.53 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இது ஒரு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.பொதுத் தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சத்தை போக்கும் வகையில் பரிக்சா பே சர்ச்சா ( Pariksha Pe Charcha), அதாவது தமிழில் தேர்வுகள் மீதான பயம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மத்திய கல்வித்துறையின் மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் அனைத்து மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடுவார். நிகழ்ச்சியில் ஒரு மாநிலத்திற்கு 36 மாணவர்கள் என்ற அடிப்படையில் கலந்து கொள்வர்.மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்வு தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க இதுவரை Mygov தளத்தில் 3.53 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்திருக்கின்றனர். இதை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளது.இந்த விவரத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் கின்னஸ் சாதனை சான்றிதழையும் அவர் பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி