உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவ., 26ல் பார்லி., கூட்டுக்குழு கூட்டம்

நவ., 26ல் பார்லி., கூட்டுக்குழு கூட்டம்

புதுடில்லி : அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 75 ஆண்டுகள்நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், நவ., 26ல், பார்லி., சிறப்பு கூட்டுக்குழு கூட்டம் நடக்கிறது. நம் அரசியலமைப்பு சட்டம், 1949 நவ., 26ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1950 ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி, தேசிய சட்ட தினம் கொண்டாடப்பட்டது. கடந்த 2015ல், அம்பேத்கரின் 125வது பிறந்த நாளையொட்டி, நவ., 26, இனி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படும் என, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அறிவித்தது.இந்நிலையில், அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், நவ., 26ல், பார்லிமென்டின் மைய மண்டபத்தில் லோக்சபா, ராஜ்யசபாவின் சிறப்பு கூட்டுக்குழு கூட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை