உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் களேபரம்: உ.பி., எம்.எல்.ஏ.,- பயணி மோதல்

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் களேபரம்: உ.பி., எம்.எல்.ஏ.,- பயணி மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது பயணி ஒருவரும், உ.பி. மாநில எம்எல்ஏ ஒருவரும் மோதிக் கொண்டனர். டில்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் AI-837 லக்னோவுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் உ.பி. மாநிலம் கவுரிகஞ்ச் எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் பயணம் செய்து கொண்டிருந்தார். இதே விமானத்தில் சமத் அலி என்ற பயணியும் இருந்துள்ளார். இந் நிலையில், பதேபூர் மாவட்டம், ராஜிப்பூர் பகுதியைச் சேர்ந்த பயணி சமத் அலி செல்போனில் யாரோ ஒருவரிடம் உரக்க பேசியதாக தெரிகிறது. பேச்சின் ஊடே, அருவருக்கத்தக்க வகையில் அநாகரிமான வார்த்தைகளை அவர் பிரயோகித்ததாக கூறப்படுகிறது.அவரின் சத்தமான மற்றும் அருவருக்கத்தக்க பேச்சைக் கண்டு பொறுக்க முடியாத எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் அவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். மேலும், அநாகரிகமாக பேச வேண்டாம், மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக உள்ளது என்று தடுத்துள்ளார்.அதை பொருட்படுத்தாமல் மீண்டும் அதுபோன்றே பேசியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இதே பேச்சு நீடிக்க, இருவருக்கும் இடையே மோதல் மூண்டது. ஒரு கட்டத்தில் அனைத்து பயணிகள் கண் முன்னே இருவரும் மோதிக்கொண்டனர்.மற்ற பயணிகள் இதைக் கண்டு அலற, விமான சிப்பந்திகள் ஓடி வந்து இருவரையும் விலக்கவிட்டனர். நடுவானில் இருவரும் மோதிக் கொண்டதால் ஒரு கட்டத்தில் பயணிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.பின்னர் விமானம் லக்னோ விமான நிலையம் வந்தவுடன் இதுகுறித்து எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, பயணி சமத் அலியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

பாரதன்
அக் 01, 2025 21:29

பொது ஒழுங்கு தவறும் அமைதிக் கும்பல்


krishnamurthy
அக் 01, 2025 21:05

அவன் அப்படித்தானே


Nachiar
அக் 01, 2025 16:53

முறைப்படி விமானப் பணிப்பெண்ணிடம் முறையிட்டிருக்க வேண்டும். சட்டத்தை கடைப்பைடிக்க மற்றும் இப்படியான சந்தர்ப்பங்களை சமாளிக்க அவர்களுக்கு பயிட்சி அழிக்கப் பட்டுள்ளது.


பெரிய ராசு
அக் 01, 2025 16:31

பொது டங்களில் சத்தமாக பேசுவது கடுமையான சத்தத்தில் பாட்டு கேட்பவர்களின் காதை டமரமாகி விடவும் ..


Rathna
அக் 01, 2025 16:14

விமானம் கிளம்பி ஒரு சில ஆயிரம் மீட்டர் உயரம் கடந்த பின் போன் சிக்னல் கிடைத்து விடும். உயரே எழும்பும் போது மட்டுமே மொபைல் சிக்னல் பிலைட் சிக்னல்களுக்கு இடைஞ்சலாக இருப்பதால் மொபைல் போனை அணைக்க சொல்லுவர். பொது இடத்தில எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாத மூடன்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
அக் 01, 2025 15:56

பாஸ் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? போலீஸ் ஆளும் கட்சி mla சொல்வதை நம்புவது எல்லா மாநிலத்திலயும் ஒரே மாடல் தான் போல


VSMani
அக் 01, 2025 14:44

நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது எப்படி ஐயா செல்போனில் பேசமுடியும்.? சிக்னல் இருக்காதே? கேட்கிறவன் கேனயன் என்றால் கேப்பையிலும் தேன் வடியும் என்பான்?


Suppan
அக் 01, 2025 14:42

அந்த சமட் அலி airplane mode க்கு மாற்றியிருக்க மாட்டார். விமானம் மேரே பறக்க ஆரம்பிக்குமுன் பேச ஆரம்பித்திருப்பார்.


Srinivasan Guru Murthy
அக் 01, 2025 14:38

How he can talk in a Mobile Phone when the Flight is operating in the Sky? Where is the Network? The Mobile will be in the Flight Mode.


vijay
அக் 01, 2025 14:22

ஒரு முறை நான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் போகும் போகும்போது டபுள் டெக்கர் . என் முன்னே இருந்த ஒருவர் தீவிர இளையராஜா ரசிகர் போலும் , இசை ஞானி பாடிய "தென்றல் வந்து தீண்டும் போது " என்று பாடலை மொபைல் போனில் போட்டு விட்டு கேட்க தொடங்கினர் , கேட்க இனிமையாக இருந்தது,ரசித்தேன் ஏன் என்றல் நானும் இசை ஞானியின் தீவிர ரசிகன். பாடல் முடிந்தது , திரும்பவும் அதே பாடல் ஒலிக்க தொடங்கியது . இப்பவும் ரசித்தேன் , பாடல் முடிந்தது , திரும்பவும் அதே "தென்றல் வந்து" ஒலிக்க தொடங்கியது. இம்முறை , இவர் வேற எதாவது பாடல் போடுவார் என்று எதிர்பார்த்த எனக்கு, என் கணிப்பு பொய்த்து விட்டது . . மனிதர் அசரவில்லை , ஏறக்குறைய 15 முதல் 20 முறையாவது நான் கேட்டுருப்பேன் ஆனால் அவர் நிறுத்தவேயில்லை. எனக்கு அவர் மீது எரிச்சல் தான் வந்தது . மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று சிறுதுளவும் யோசிக்கவேயில்லை .எப்படி தான் இந்த மனிதரை அவருடைய வீட்டுக்காரஅம்மா சமாளிக்கறங்களோ என்று எண்ணி வியந்தேன் . இதில் இருந்து எப்படி மீளுவது என யோசித்து யோசித்து தூங்கியே விட்டேன். இடையில் அணைத்து திரும்பவும் பாடல் போட்டாரா என்று தெரிய வில்லை. சென்னை தொடங்கி பெங்களூரு வரை அதே பாடல் ஒலித்து கொண்டே இருந்தது மனிதரில் இத்தனை நிறங்களா என்ற JK யின் புத்தகம் நினைவுக்கு வந்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை