வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆம்.. 1/2/25..அன்று சென்னை யிலிருந்து கொழும்பு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தேன்.. அங்கு தரையிறங்கும்.. நிலையில்.. மீண்டும் எழுந்து வட்டமடிதிய பின் இறங்கியது
சமீபகாலமாக விமானங்களுக்கும் போதாதகாலம். அடிக்கடி கோளாறுகளில் சிக்கிக்கொள்கின்றது.
இது விமானியின் தவறு , துறை ரீதியான நடவடிக்கை thevai
இப்ப விமான பயணம் என்ன தப்பு நடக்குமோன்னு பயமா இருக்கு.
இது போன்ற ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் நடந்தது. சென்னை மதுரை இண்டிகோ விமானத்தில் மதுரைக்கு வந்துகொண்டிருந்தேன். மதுரையில் தரை இறங்கிய விமானம் ஓடுதளத்தில் சிறிது தூரம் ஓடி மறுபடியும் மேலே எழும்பிச் சென்றது. பயணிகள் அச்சத்தில் உறைந்து விட்டனர். நல்லபடியாக மேல் எழும்பிய விமானம் ஒரு பெரிய வடடம் அடித்துவிட்டு பத்திரமாக மீண்டும் தரை இறங்கியது.
மற்ற விமானிகள் தொடர்ந்து சிரமமின்றி தரையிறக்கும்போது இவர்களுக்கு மட்டும் என்ன கஷ்டம்? தவறை பாராட்டுவது ஏன்?
பாராட்டுவது கிடக்கட்டும். முதலில் தவறு யாரால் நடந்தது என்று விசாரணை நடத்த பட வேண்டும். தவறு செய்தவர் தண்டிக்க பட வேண்டும்
விமானிகள் முதலில் தவறு செய்தனர். பிறகு சமயோசிதமாக விமானத்தை தரையிறங்கி விபத்து ஏற்படாமல் செய்தனர். இந்த விமானிகளின் செயல்களை மெச்சுவதா அல்லது ஓடுதளத்திற்கு முன்பே விமானத்தை தரையிறக்க முயற்சித்தது தவறு என்று திட்டுவதா?
செய்தியை சரியாக படியுங்க, கட்டுப்பாடு அறையில் இருந்து சொன்னதால் இறக்கினார்கள்.
"Go Around" என்பது மிகவும் சாதாரணமாக நடக்கக் கூடியது. இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை
விரிவு படுத்த வேண்டும்.