உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசிடம் மக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை; பிரதமர் மோடி

காங்கிரசிடம் மக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை; பிரதமர் மோடி

புதுடில்லி: '' மக்களின் விருப்பங்களை காங்கிரஸ் நசுக்கியது. இதனால், அக்கட்சியிடம் இருந்து எதிர்பார்ப்பதை மக்கள் நிறுத்திவிட்டனர்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.டில்லியில் ஆங்கில மீடியா நடத்திய கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: எட்ட முடியாத எந்த இலக்குகளும் கிடையாது. இந்தியா பெரிதாக சிந்திக்கிறது. பெரிய லட்சியங்களை அடைகிறது. சிந்தனையில் பெரிய அளவில் மாற்றம் செய்ததால், இது சாத்தியமாகியுள்ளது.ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர விரும்புகிறேன் என முன்பு கூறியிருந்தேன். குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வரும் முதல் தலைமுறையினராக அவர்கள் இருக்க வேண்டும்.2014க்கு முன் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் எப்படி இருந்தன என்பது இளைஞர்களுக்கு தெரியாது. ரூ.10 -12 லட்சம் கோடி அளவுக்கு மோசடிகள் நடந்தன. 2029ல் இளைஞர்கள் ஓட்டளிக்க செல்லும் போது, ஒப்பிடுவதற்கு என அவர்களுக்கு எதுவும் இருக்காது.இது பாரதத்தின் யுகம் என ஒட்டு மொத்த நாடும் சொல்கிறது. உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வரும் நிலையில் பாரதம் இருக்கிறது.இந்தியாவின் சாதனையும், வெற்றியும் உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையையும் எதிர்பா்ப்பையும் அளித்து உள்ளது. முன்பு உலக நாடுகளுக்கு சுமையாக இருந்த இந்தியா, இன்று உலகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது. நாட்டின் வேகம் மற்றும் சாதனைகளில் இருந்து இந்தியாவின் எதிர்கால திசையை புரிந்து கொள்ள முடியும். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன போதும், உலகின் 11வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 5வது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளோம். அதே வேகத்தில் 3வது இடத்தை நோக்கி முன்னேறுகிறோம்.18 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் பாரத்தின் ஓராண்டு ஜிடிபி 1 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால், இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் இதனை தாண்டிவிட்டோம். மக்களுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ஒரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே ஏழை மக்களுக்கு செல்கிறது என முன்னாள் பிரதமர் கூறினார். மக்களின் விருப்பங்களை காங்கிரஸ் நசுக்கியது. அக்கட்சியிடம் இருந்து மக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகளுக்கான பொம்மைகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இன்று பொம்மைகள் ஏற்றுமதி மும்மடங்கு அதிகரித்து உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பில் மூலதன செலவு ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

orange தமிழன்
மார் 07, 2025 11:09

மக்கள் காங்கிரஸ் இடம் ஒன்றே ஒன்று தான் எதிர்பார்க்கிறார்கள்... பப்பு மற்றும் அவரின் குடும்பத்தினர் அரசியலை விட்டு ஒழியனும் .......முடிந்தால் நாட்டை விட்டே........


Kasimani Baskaran
மார் 07, 2025 06:54

நேற்றுதான் தாய்மொழி தேன் கூடு என்று சொன்னார் தமிழக முதல்வர் ஆனால் இன்று டாஸ்மாக் தான் தேன்கூடு என்று சொல்ல வைத்து விட்டார் மோடி. சிறப்பாக செய்து இருக்கிறார்.


ஆனந்த்
மார் 07, 2025 04:22

உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா முதன்மையான நாடாக மாற வேண்டும்


Kannuchamy
மார் 07, 2025 04:20

எத்தனை இளைஞர்கள் அரசியல் கலந்துள்ளனர்


naranam
மார் 07, 2025 02:21

யார் சொன்னது? ஊழல், பொய், பித்தலாட்டம், சட்ட விரோத செயல்கள், மற்றும் நம் நாட்டைப் பற்றி வெளி நாடுகளுக்குச் சென்று தரக் குறைவாகப் பேசுவது, சோனியா குடும்பத்துக்கு ஜால்ரா, வெறுப்பு அரசியல் , இசுலாமியர்களிடம் ஓட்டு அரசியல், ஹிந்து மத எதிர்ப்பு போன்றவற்றை கான்கிரசிடமிருந்து எதிர் பார்க்கலாம்.


முக்கிய வீடியோ