உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான விபத்து: 162 உடல்கள் அடையாளம் தெரிந்தது

விமான விபத்து: 162 உடல்கள் அடையாளம் தெரிந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் விமான விபத்தில் பலியான, 270 பேரில், 162 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 120 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, கடந்த 12ம் தேதி புறப்பட்ட, 'ஏர் - இந்தியா' விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், ரமேஷ் விஷ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்தார். 241 பேர் பலியாகினர். மேலும், மருத்துவ கல்லுாரி மாணவர்கள், 29 பேரும் உயிரிழந்தனர். விபத்தின்போது, விமானம் தீப்பிடித்து எரிந்ததால், இறந்தவர்களை அடையாளம் காண முடியாததுடன், உடல் உருக்குலைந்தது. இதனால் அவர்களை அடையாளம் காண, டி.என்.ஏ., எனப்படும், மரபணு சோதனை நடத்தப்பட்டது.இது குறித்து ஆமதாபாத் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், ''நேற்று காலை வரை நடத்தப்பட்ட மரபணு சோதனையில், 162 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதில், 120 பேரின் உடல்கள் குஜராத், மஹாராஷ்டிரா, பீஹார், ராஜஸ்தான் மற்றும் டையு பகுதிகளை சேர்ந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதில், ஐந்து பேர் விமானத்தில் பயணம் செய்யாதவர்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி