உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுவானில் விமான ஜன்னல் விலகியதால் பரபரப்பு

நடுவானில் விமான ஜன்னல் விலகியதால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குருகிராம்: கோவாவில் இருந்து புனேவுக்கு சென்ற விமானத்தின் ஜன்னல் கதவு நடுவானில் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 'எஸ்ஜி1080' விமானம் நேற்று கோவாவில் இருந்து மஹாராஷ்டிராவில் புனே நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னல் கதவு திடீரென விலகியது.அதை பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இது வைரலான நிலையில் அந்த விமானம் புனேவில் தரையிறங்கியதும் சரி செய்யப்பட்டதாக விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதில் பயணிகள் பாதுகாப்பில் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், விமானத்தில் கேபின் அழுத்தம் இயல்பாகவே இருந்தது என்றும் விமானம் நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakath Basha
ஜூலை 03, 2025 16:38

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு என்றால் ஏர் இந்தியா என்று பெயரை குறிப்பிட்டு சொல்லும் நீங்கள் ஏன் மற்ற நிறுவன விமானங்கள் என்று வரும் போது தனியார் விமானம் என்று ஏன் சொல்லுறீங்க ஏர் இந்தியா விமானம் தனியார் இல்லை யா


பிசின் குமார்
ஜூலை 03, 2025 09:40

அடப்பாவிங்களா... கண்ணாடி கூட பிரிஞ்சி வர மாதிரி ஒட்டுவீங்களா?


பைலட் பிரேம்நாத்
ஜூலை 03, 2025 09:38

அடப்போங்கப்பா.. உள்ளே ஏ.சி வேலை செய்யாம இருந்திருக்கும். காத்து வரலியேன்னு அவிங்களே தொறந்திருப்பாங்க.


அப்பாவி
ஜூலை 03, 2025 09:37

இந்தியாவில எல்லாமே ச்சீப். குறைந்த விலையில் சேவைன்னா இப்பிடித்தான் இருக்கும்.


Rajaram SN
ஜூலை 03, 2025 10:28

Cheap is not a right statement.... it is only a cheap quality in line with the price..... Price is cheaper due to competition...


Padmasridharan
ஜூலை 03, 2025 06:27

ஜன்னல் கதவு இரண்டு இருக்கும். உள்ளேயும் வெளியேயும். இரண்டுமே திறந்திருந்தால் அழுத்தத்தில் மாற்றம் தெரிந்திருக்கும். இதில் உள்ளே இருக்கும் கண்ணாடி மட்டும் திறந்ததினால் இவருக்கு மட்டும் தெரிந்த விஷயம் மற்றவர்களுக்கு தெரியாமல் போயிருக்கிறது சாமி.


Ramona
ஜூலை 03, 2025 06:05

இதுவே ஏர் இந்திய விமானம் என்றால் பார்டர் கட்டி செய்தி ப்ளாஷ் செய்வாங்க, இப்போ தனியார் விமானம் என்று மரியாதையாக செய்தி வருகிறதே, இது நியாயமானதாங்க?


Ramona
ஜூலை 03, 2025 06:05

இதுவே ஏர் இந்திய விமானம் என்றால் பார்டர் கட்டி செய்தி ப்ளாஷ் செய்வாங்க, இப்போ தனியார் விமானம் என்று மரியாதையாக செய்தி வருகிறதே, இது நியாயமானதாங்க?


Kasimani Baskaran
ஜூலை 03, 2025 03:57

இந்த பானெல்களுக்கு பின்னால் இரண்டு அடுக்கு கண்ணாடி உண்டு. அதை மீறித்தான் காற்று போகவேண்டும். ஆகவே இது ஒரு காஸ்மெட்டிக் பிரச்சினை - நல்ல பராமரிப்பு இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் வராது.


முக்கிய வீடியோ