தந்தேராஸ் பண்டிகை கொண்டாட்டம் இன்று முதல் தொடக்கம்; பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து
புதுடில்லி; தந்தேராஸ் பண்டிகைக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தந்தேராஸ் பண்டிகை என்பது தீபாவளி கொண்டாட்டங்களின் தொடக்கத்தை குறிக்கும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும். இந்த ஆண்டு தந்தேராஸ் இன்று(அக்.18) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவு; நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தந்தேராஸ் பண்டிகை வாழ்த்துகள். இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் அனைவரின் மகிழ்ச்சி, வளர்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன். தன்வந்திரி கடவுள் அனைவருக்கும் நிறைவான ஆசிர்வாதங்களை வழங்கட்டும்.உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து பதிவு; தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும், மகிழ்ச்சி, செழிப்பு கிடைக்க பகவான் தன்வந்தரியை பிரார்த்திக்கிறேன்.